Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • குளிர்காலத்தில் பாலூட்டும் தாய்மார்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்

குளிர்காலத்தில் பாலூட்டும் தாய்மார்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்

By: Karunakaran Thu, 31 Dec 2020 1:43:15 PM

குளிர்காலத்தில் பாலூட்டும் தாய்மார்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்

குளிர்காலத்தில் நிலவும் குளிர்ந்த காலநிலை தாய்மார்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகளின் ஆரோக்கியத்தை பாதிக்கும். ஆதலால் பாலூட்டும் தாய்மார்கள் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும். உடலில் நீர்ச்சத்து நிரம்பி இருப்பதை உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும். ஊட்டச்சத்துமிக்க உணவுகளை உட்கொள்ள வேண்டும். எண்ணெய் வகை உணவுகள், காரமான மற்றும் சர்க்கரை நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொள்ளவும் வேண்டும். அறையின் வெப்பநிலையை சீராக பராமரிக்க வேண்டும். குளிர் காலங்களில் தாயும்-சேயும் நோய்வாய்ப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதால் கவனமுடன் செயல்பட வேண்டும். பாலூட்டும் தாய்மார்கள் தினமும் காலையில் மிதமான சுடுநீரில் எலுமிச்சை சாறு கலந்து பருகிவருவது நல்லது. அது செரிமான செயல்பாடுகளையும், குடல் இயக்கத்தையும் ஒழுங்குபடுத்த உதவும். மேலும் எலுமிச்சையில் இருக்கும் வைட்டமின் சி சத்து நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும் உதவும்.

breastfeeding,mothers,winter,babies ,தாய்ப்பால், தாய்மார்கள், குளிர்காலம், குழந்தைகள்

சூப்கள் பருகுவது செரிமானத்தை எளிதாக்கும். பூண்டு, இஞ்சி போன்றவை பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளை கொண்டவை என்பதால் சமையலில் அவற்றை தவறாமல் சேர்த்துக்கொள்ள வேண்டும். வைட்டமின்கள், கால்சியம், இரும்பு, ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்து கொண்ட உணவுகளை சாப்பிடுவது பால் உற்பத்தியை அதிகரிக்க உதவும். காளான்கள், தக்காளி, பச்சை இலை காய்கறிகள், கேரட், சர்க்கரைவள்ளி கிழங்கு, பீன்ஸ், சால்மன் மீன், சியா விதைகள், பால், நட்ஸ் வகைகள், பழச்சாறுகள், வெண்ணெய், முலாம்பழம் மற்றும் சிட்ரஸ் பழங்கள் போன்றவற்றை சாப்பிடலாம்.

பிராக்கோலி, காலிபிளவர், துரித உணவுகள் மற்றும் கடல் உணவுகளை தவிர்ப்பது நல்லது. ஊட்டச்சத்து நிபுணரை கலந்தாலோசித்து உடல்நலத்திற்கு பொருத்தமான உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிட்டு வருவது குழந்தையின் ஆரோக்கியத்திற்கும் நன்மை சேர்க்கும். குழந்தைக்கு பால் கொடுப்பதற்கு சவுகரியமாக இருக்கும் வகையிலான ஆடைகளை அணிவதும் முக்கியமானது. குளிர்த்தன்மை காரணமாக மார்பக காம்பில் வலி, உணர்வின்மை போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ளக்கூடும். அதிக குளிர்ச்சியால் பால் சுரக்கும் நுண்குழாய்களில் அடைப்பு ஏற்படக்கூடும். அதனால் மார்பகங்களில் மசாஜ் செய்து வருவது நல்லது.

Tags :
|