Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • கால்சியம் குறைபாடு ஏற்பட்டால்...உடனே மருத்துவரை அணுகுவது அவசியம்!!

கால்சியம் குறைபாடு ஏற்பட்டால்...உடனே மருத்துவரை அணுகுவது அவசியம்!!

By: Monisha Tue, 28 July 2020 3:48:59 PM

கால்சியம் குறைபாடு ஏற்பட்டால்...உடனே மருத்துவரை அணுகுவது அவசியம்!!

கால்சியம் குறைபாட்டில் மூலம் பல விதமான உடல் உபாதைகள் ஏற்படும். அதை வருவதற்கு முன்பே தடுக்க வேண்டியது நமது அத்தியாவசிய கடமை ஆயிற்று. தசை வலி, எரிச்சல், கால் வலி மற்றும் வாய்ப்பகுதியை சுற்றியுள்ள பகுதிகளில் வலி, போதுமான சக்தி இல்லாமல் சோர்வாக இருப்பது, மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு அதிகமாக வலி ஏற்படுவது, போன்றவற்றையெல்லாம் கால்சியம் குறைபாட்டின் அறிகுறிகள். இந்த குறைபாடுகள் உங்களுக்கு இருக்குமேயானால் நிச்சயமாக நீங்கள் மருத்துவரை அணுகி கால்சியத்தின் அளவை சோதித்துக் கொள்வது மிகவும் அவசியமாக இருக்கிறது.

ஒஸ்டியோபெனிய என்கிற ஒரு காரணி ஆனது மினரல் அளவை எலும்பிலிருந்து குறைக்கிறது. எலும்பில் உள்ள மினரல் அளவானது குறையும் பொழுது ஆஸ்டியோபோரோசிஸ் என்னும் வியாதி வருகிறது. இந்த வியாதியானது எலும்பை மிகவும் ஒல்லியாக மாற்றிவிடுகிறது. எலும்பு மிகவும் ஒல்லியாக மாறும்பொழுது சுலபமாக உடைந்து விழுகிறது. இப்படி உடையும் பொழுது அதிகமான வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.

calcium,fatigue,bone,back pain,diet ,கால்சியம்,சோர்வு,எலும்பு,முதுகு வலி,உணவு

மேலும் உட்காருவதில் சிக்கல் முதுகு வலி போன்ற பல விதமான பிரச்சனைகள் ஏற்படுகிறது. ஒரு சில எலும்பு முறிவுகள் தீர்வு காண முடியாமல் போய்விடுகிறது. நமக்கு இந்த வியாதி வராமல் இருக்க நிச்சயமாக கால்சியத்தின் அளவு மிகவும் அதிக அளவில் இருக்க வேண்டியது அவசியமாக உள்ளது.

உடலில் உள்ள கால்சியத்தின் அளவு குறையும் பொழுது இது போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. முக்கியமாக நமது எலும்புகளுக்கு அதிக அளவில் கால்சியம் சத்து ஆனது தேவைப்படுகிறது. எனவே கால்சியம் தினமும் நாம் உண்ணும் அனைத்து உணவிலும் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். தினமும் நாம் கால்சியம் இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

calcium,fatigue,bone,back pain,diet ,கால்சியம்,சோர்வு,எலும்பு,முதுகு வலி,உணவு

உடலில் கால்சியம் குறைபாடு ஏற்படும் பொழுது, நம் உடலில் உள்ள ரத்தக் அழுத்தத்தின் அளவும் அதிகமாகிறது. அதாவது உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டு அதிகமான மன அழுத்தம் ஏற்படுகிறது. உயர் ரத்த அழுத்தம் ஏற்படும்போது அந்த உயர் ரத்த அழுத்தமே பலவிதமான வியாதிகளுக்கு வித்திடுகிறது. மேலும் அதிகமான மன அழுத்தம் டென்ஷன் என்பது நம் மன அமைதியை குலைத்து விடுகிறது. எனவே நம் உடலில் கல்சியத்தின் அளவு முடிந்த அளவு குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் எனவும் நாம் உண்ணும் அனைத்து உணவுகளிலும் கால்சியம் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்.

சில உணவுகளில் கால்சியத்தின் அளவு மிகவும் அதிகமாக இருக்கிறது. அதை பற்றி தற்பொழுது பார்க்கலாம். பன்னீர் தயிர் பால் கீரை வகைகள் வாழைப்பழம் போன்றவைகளில் கால்சியத்தின் அளவு மிகவும் அதிகமாக இருக்கிறது. முக்கியமாக பால் பொருட்களிலும் கால்சியம் மிகவும் அதிகமாக இருக்கிறது. கீரை வகைகளை நாம் பலரும் பெரிதாக உணவில் சேர்த்துக் கொள்வதில்லை. கீரை வகைகளில் அதிகமான கால்சியம் இருக்கிறது. இதுபோக ஆரஞ்சு, ஒரு சில விதைகள் போன்றவைகளிலும் கால்சியம் இருக்கிறது உங்களது தினசரி உணவு வகைகளில் மேலே குறிப்பிட்ட உணவு இருக்குமாறு பார்த்துக் கொள்வது மிகவும் அவசியம்.

Tags :
|