அதிக சத்துக்கள் நிறைந்த தேங்காய் பூ
By: Nagaraj Sat, 05 Nov 2022 11:53:31 PM
சென்னை: தேங்காய் பூ என்பது முற்றிய தேங்காயில் உண்டாகும் கருவளர்ச்சியே ஆகும். தேங்காய்பூவில், தேங்காய் மற்றும் இள நீரில் இருப்பதை இருப்பதை விட அதிக சத்துக்கள் இருக்கிறது.
இளநீரில் இருக்கும் சதைப்பற்றினைப் போல ருசி இருக்கும். அதன் நன்மைகளைப் பற்றித் தெரிந்தால் தேங்காய் பூவை தேடி கண்டுபிடித்துச் சாப்பிடத் தோன்றும். இதை நாம் சாப்பிட்டு வந்தால் தைராய்டு பிரச்சனை குணமாகும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ஜீரண சக்தி அதிகரிக்கும்.
வைட்டமின்கள் அதிக அளவு கிடைக்கும். மலச்சிக்கல் குணமாகும்.
ரத்தத்தில் அதிகப்படியான சர்க்கரையை விரட்டும். கொழுப்பை கரைக்க உதவி
செய்யும். ரத்தத்தில் சேரும் கெட்ட கொழுப்பை கரைக்கும்.
மன
அழுத்தம் குறையும். புற்றுநோய் செல்களை அழிக்கும். உடல் எடையை கட்டுக்குள்
வைக்க உதவும். தேங்காய் பூவில் முக்கியமான அம்சம் முதுமையை தடுக்கும்
ஆன்டி ஆக்சிடென்ட்கள் நிறைந்துள்ளது.
இதை சாப்பிட்டு வந்தால் சூரியனால் ஏற்படும் சரும பாதிப்புகள் நம்மை நெருங்காது.