Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • அனைவரும் விரும்பும் சர்க்கரை வள்ளிக் கிழங்கின் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள்!

அனைவரும் விரும்பும் சர்க்கரை வள்ளிக் கிழங்கின் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள்!

By: Monisha Wed, 14 Oct 2020 12:40:34 PM

அனைவரும் விரும்பும் சர்க்கரை வள்ளிக் கிழங்கின் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள்!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிச் சாப்பிடும் கிழங்கு வகைகளில் ஒன்று சர்க்கரை வள்ளிக் கிழங்கு. இதில் உடலுக்கு அவசியமான இரும்பு, கால்சியம், மக்னீசியம், மாங்கனீசு, பொட்டாசியம் போன்ற தாது உப்புக்கள் நிறைந்து உள்ளது.

நீரிழிவு பாதிக்கப்பட்டவர்கள் குறைந்த அளவு உண்ணலாம். மற்ற கிழங்கு வகைகளைவிட இதில் அதிக அளவில் பீட்டா கரோட்டின் மூலக்கூறுகள் உள்ளது. இவை இயற்கை நோய் எதிர் பொருட்களாகும். சர்க்கரை வள்ளிக்கிழங்கானது கொழுப்பினை மிகக் குறைந்த அளவில் கொண்டதாக உள்ளது. இதனால் ஒபேசிட்டி பிரச்சினை உள்ளவர்கள் உட்பட எவரும் எடுத்துக் கொள்ளலாம்.

சர்க்கரைவள்ளி கிழங்கானது நார்ச்சத்து அதிகம் கொண்டதால், உடலில் கொழுப்பானது சேர்க்கப்படுவது தடுக்கப்படுகின்றது, இதனால் நீங்கள் கொஞ்சமும் கவலை இல்லாமல் சர்க்கரை வள்ளிக் கிழங்கினை எடுத்துக் கொள்ளலாம்.

sweet potato,health,iron,calcium,magnesium ,சர்க்கரை வள்ளிக் கிழங்கு,ஆரோக்கியம்,இரும்பு, கால்சியம், மக்னீசியம்

மேலும் இது ரத்த அழுத்தத்தை குறைப்பதாகவும், நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிப்பதாகவும் உள்ளது. இதனால் உடல் நலம் சரியில்லாதவர்கள் கட்டாயம் சர்க்கரை வள்ளிக் கிழங்கினை எடுத்துக் கொள்வது பரிந்துரைக்கப்படுகின்றது. நுரையீரல் மற்றும் தொண்டை புற்றுநோயை எதிர்க்கும் தன்மை கொண்டது.

மேலும் கரு உண்டாகி இருப்பவர்கள் நிச்சயம் இதனை எடுத்துக் கொண்டால், கருவளர்ச்சி சிறப்பாக இருக்கும். கரு உண்டான முதல் 4 மாதங்களில் மருத்துவர்களே சர்க்கரை வள்ளிக் கிழங்கினை எடுத்துக் கொள்ள பரிந்துரைக்கப்படுகின்றது. மேலும் சர்க்கரை வள்ளிக்கிழங்கானது மூச்சு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை சரி செய்வதாக உள்ளது.

Tags :
|
|