நாள்பட்ட அல்சருக்கான தீர்வு சீரகப்பொடிதான் சரியான தீர்வு
By: Nagaraj Wed, 19 July 2023 9:13:19 PM
சென்னை: எந்த மருந்துக்கும் குணமாகாத நாள்பட்ட அல்சருக்கான தீர்வு சீரகப்பொடிதான். சீரகத்துக்கு ‘போஜன குடோரி’ என்றொரு பெயர் இருக்கிறது. இதற்கு சாப்பாட்டை செரிக்க வைப்பது என்று அர்த்தம்.
சீர் + அகம் = சீரகம். இதில் அகம் என்பது வயிற்றையும் குறிக்கும், மனதையும் குறிக்கும். இந்த இரண்டையும் சீராக வைப்பதால்தான் இதற்கு சீரகம் என்று பெயர். எந்த மருந்துக்கும் குணமாகாத நாள்பட்ட அல்சருக்கான தீர்வு சீரகப்பொடிதான். ஆனால், சீரகப்பொடியை வீட்டில்தான் தயாரிக்க வேண்டும். கடையில் வாங்கக் கூடாது.
அரை டீஸ்பூன் சீரகப்பொடியை சிறிது பசு வெண்ணெயில் குழைத்து, ஒன்றரை மாதம் சாப் பிட்டால் தீராத வயிற்றுப்புண்ணும் குணமாகும். இதைச் செய்ய முடியாதவர்கள், சீரகப்பொடி, முட்டை யின் வெள்ளைக்கரு, எலுமிச்சைச்சாறு, வெல்லம், நெய், தேன் சேர்த்துச் செய்த சீரக லேகியத்தைச் சாப்பிடலாம்.
வைட்டமின் ‘பி’ குறைபட்டால் சிலருக்கு அடிக்கடி வாய்ப்புண் வரும். உதடு வீங்கியதுபோல இருக்கும். இவர்கள், 2 கிராம் சீரகப்பொடியில் ஒரு டீஸ்பூன் தேன் அல்லது பால் சேர்த்து சாப்பிட்டு வர, வாய்ப்புண் சரியாகும். மாதவிடாய் கோளாறுகளுக்கும் சீரகப்பொடி அருமருந்து.
கற்கண்டுத்தூளுடன் சீரகப்பொடி சேர்த்து சாப்பிட்டு வந்தால், தொடர் இருமலும், வெல்லத்துடன் சேர்த்து சாப்பிட்டால் விக்கலும் குணமாகும்.