Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • உடலில் வாத நோய் ஏற்படாமல் தடுக்கும் தன்மை கொண்ட கொடுக்காபுளி

உடலில் வாத நோய் ஏற்படாமல் தடுக்கும் தன்மை கொண்ட கொடுக்காபுளி

By: Nagaraj Fri, 27 Jan 2023 10:44:40 PM

உடலில் வாத நோய் ஏற்படாமல் தடுக்கும் தன்மை கொண்ட கொடுக்காபுளி

சென்னை: கொடுக்காபுளி தினமும் சாப்பிட்டு வருவதால் நம் உடலில் வாத நோய் ஏற்படாது. கொடுக்காய்ப்புளியில் நீர்ச்சத்து, நார்ச்சத்து, புரதச்சத்து, கார்போஹைட்ரேட் ஆகியவையும் தாதுஉப்புக்களான கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, பொட்டாசியம் ஆகியவை காணப்படுகின்றன.

நம் உடலில் ஜீரண சக்தி அதிகரிக்க தினமும் கொடுக்காபுளி சாப்பிட்டு வரவேண்டும். கொடுக்காய்ப்புளி மரத்தின் பூவானது பல்வலி, ஈறுகளின் பிரச்சினைக்கும் இது தீர்வளிக்கிறது.

கொடுக்காய் புளி நீரிழிவு நோயை சரிசெய்ய பயன்படுத்தப்படுகிறது. இதில் உள்ள பைட்டோ கெமிக்கல்கள் நமது உடலில் உள்ள கொழுப்பைக் குறைத்து குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இதிலுள்ள ஆக்ஸிஜனேற்ற பண்புகள் இதயத்தை ஆக்ஸிஜனேற்ற அழுத்த பிரச்சனைகளிருந்து பாதுகாக்க உதவுகின்றன.

diaphragm,hemorrhoids,intestinal ulcer,anti-inflammatory properties ,கொடுக்காபுளி, கருப்பபை, குடல் புண், எதிர்ப்பு பண்புகள்

சருமத்தில் ஏற்படும் தோல் அழற்சி, வீக்கம், அரிப்பு போன்றவற்றிலிருந்து பாதுகாத்து சரும ஆரோக்கியத்தை பராமரிக்க கொடுக்காய் புளி உதவுகிறது. கொடுக்காய்ப்புளி காயில் உள்ள விட்டமின் பி1 மூளை மற்றும் நரம்புகளின் வளர்ச்சியை ஊக்குவித்து நன்கு வளரச் செய்கிறது.

உடல் எடை அதிகம் உள்ளவர்கள் தினமும் கொடுக்காய்ப்புளி சாப்பிட்டு வந்தால் உடல் எடை விரைவில் குறையும். கொடுக்காய்ப்புளி தாவரமானது மண்ணில் நைட்ரஜனை நிலைநிறுத்தி மண்ணினை வளப்படுத்துகிறது.

பெண்களுக்கு ஏற்படும் கருப்பை சம்பந்தமான நோய்கள், குடல் புண் ஆகியவற்றுக்கு கொடுக்காய் புளி நல்ல மருந்து. கொடுக்காய் புளியில் வயிற்று புண் எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது நமது வயிற்றில் உள்ள அமிலத்தின் அளவைக் குறைக்கும் தன்மை கொண்டது.

Tags :