Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • சோம்பு கலந்த தண்ணீரை தினமும் குடித்து வாருங்கள்... அபார பலன்கள் கிடைக்கும்

சோம்பு கலந்த தண்ணீரை தினமும் குடித்து வாருங்கள்... அபார பலன்கள் கிடைக்கும்

By: Nagaraj Wed, 21 Sept 2022 9:33:35 PM

சோம்பு கலந்த தண்ணீரை தினமும் குடித்து வாருங்கள்... அபார பலன்கள் கிடைக்கும்

சென்னை: தினமும் சோம்பு தண்ணீர் குடிச்சு வந்தா உடல் எடையைக் குறைக்கலாம். சமையலில் பயன்படுத்தும் மணமிக்க உணவுப் பொருளான சோம்பு, உடல் எடையைக் குறைக்க உதவும்.

அதிலும் அதனை தண்ணீருடன் சேர்த்து குடித்து வந்தால், உடல் பருமன் குறையும். மேலும் ஆயுர்வேத மருத்துவத்தில் உடல் பருமனை குறைக்க சோம்பு தண்ணீர் பரிந்துரைக்கப்படுகிறது. ஏனெனில் சோம்பில் உடலை சுத்தப்படுத்தும், மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளன.

இங்கு சோம்பு தண்ணீர் எப்படி உடல் எடையைக் குறைக்க உதவுகிறது என்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து உடல் எடையைக் குறைக்க அதிக கஷ்டப்படாமல், சோம்பு தண்ணீர் குடித்து குறைத்துக் கொள்ளுங்கள். இதன் மூலம் பலன் தாமதமாக கிடைத்தாலும், நிரந்தரமாக இருக்கும்.

சோம்பு தண்ணீர் செய்முறை: ஒரு லிட்டர் தண்ணீரை நன்கு கொதிக்க விட்டு இறக்கி, அதில் 2 டேபிள் ஸ்பூன் சோம்பை சேர்த்து அறை வெப்பநிலையில் குளிர வைத்து பின் தினமும் குடித்து வர வேண்டும்.மெட்டபாலிசத்தை அதிகரிக்கும்.

anise,kidneys,anise,water,vitality,refreshment ,சோம்பு, சிறுநீரகங்கள், சோம்பு, தண்ணீர், சுறுசுறுப்பு, புத்துணர்வு

சோம்பு தண்ணீர் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, உடலில் உள்ள கலோரிகள் மற்றும் கொழுப்புக்களை எரித்து, உடல் எடையைக் குறைக்க உதவும். அளவுக்கு அதிகமாக பசி எடுத்தால், அதனை குறைப்பதற்கு பலரும் கண்ட கண்ட மாத்திரைகளை வாங்கி போடுவார்கள். ஆனால் சோம்பு தண்ணீரைக் குடித்து வந்தால், அது இயற்கையிலேயே பசியை அடக்கும். இதனால் கண்ட கண்ட உணவுகளை சாப்பிடாமல் இருக்கலாம்.

சோம்பு தண்ணீர் இரத்தத்தில் உள்ள அதிகப்படியான யூரிக் ஆசிட்டுகளை வெளியேற்றி, இரத்தத்தை சுத்தப்படுத்தும். தற்போதைய காலத்தில் கண்ட உணவுப் பொருட்கள், காற்று மாசுபாடு, காஸ்மெடிக் பொருட்களால், டாக்ஸின்களானது பல வழிகளில் உடலில் நுழைகிறது. ஆனால் சோம்பு தண்ணீர் குடித்து வந்தால், அவை உடலில் இருந்து டாக்ஸின்களை முற்றிலும் வெளியேற்றி, சிறுநீரகங்களில் பிரச்சனை ஏற்படுவதைத் தடுக்கும்.

தினமும் காலையில் காபி குடிப்பதற்கு பதிலாக, சோம்பு தண்ணீரைக் குடித்து வந்தால், மூளை நன்கு சுறுசுறுப்புடனும், புத்துணர்ச்சியுடனும் செயல்படும்.

Tags :
|
|
|