Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • அளவோடு மாம்பழம் சாப்பிட்டால் நிறைய நன்மைகள் கிடைக்கும்

அளவோடு மாம்பழம் சாப்பிட்டால் நிறைய நன்மைகள் கிடைக்கும்

By: Nagaraj Sat, 20 May 2023 7:36:59 PM

அளவோடு மாம்பழம் சாப்பிட்டால் நிறைய நன்மைகள் கிடைக்கும்

சென்னை: கோடை காலத்தில் மட்டுமே கிடைக்கும் மாம்பழத்தில் பல்வேறு சத்துக்கள் அடங்கியுள்ளன. மாம்பழத்தை அளவோடு சாப்பிடுவதால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும்.

மாம்பழத்தில் நார்ச்சத்து, வைட்டமின் பி6, வைட்டமின் சி, பீட்டா கரோட்டின் உள்ளிட்ட பல சத்துக்கள் நிரம்பியுள்ளன. மாம்பழத்தில் உள்ள வைட்டமின்கள் இயற்கையாகவே இரத்த அழுத்தத்தைக் குறைக்கின்றன.

eat,good,mango,summer,mango,vitamin c,vitamin b6 ,கோடை, மாம்பழம், வைட்டமின் சி, வைட்டமின் பி6

மாம்பழத்தில் உள்ள பெக்டின் என்ற கரையக்கூடிய நார்ச்சத்து, உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்கிறது. மாம்பழத்தில் உள்ள மாவுச்சத்து காரணமாக, உடல் எடை அதிகரிக்க வாய்ப்புள்ளது. மாம்பழம் சாப்பிட்டால் மலச்சிக்கல், செரிமான பிரச்சனைகள் குணமாகும்.

மாம்பழத்தில் உள்ள பீட்டா கரோட்டின் போன்ற வைட்டமின்கள் விந்தணு உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது. மூளை வளர்ச்சிக்குத் தேவையான வைட்டமின் பி6 மாம்பழத்தில் அதிகம் உள்ளது.

Tags :
|
|
|
|
|