Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • தக்காளியை உணவில் அதிகம் சேர்த்தால் ஏற்படும் விளைவுகள்

தக்காளியை உணவில் அதிகம் சேர்த்தால் ஏற்படும் விளைவுகள்

By: Nagaraj Sat, 01 Oct 2022 11:00:52 PM

தக்காளியை உணவில் அதிகம் சேர்த்தால் ஏற்படும் விளைவுகள்

சென்னை: தக்காளி அதிகம் சாப்பிட்டால் உடலுக்கு எவ்வளவு ஆபத்தை ஏற்படுத்தும் என்று தெரிந்து கொள்வோம். தக்காளி உணவின் சுவையை அதிகரிக்கும் ஓர் அற்புதமான உணவுப் பொருளாகும். தக்காளியில் பல ஆரோக்கிய நன்மைகள் அடங்கியிருக்கின்றன.

தக்காளியை நாம் தக்காளி சாஸ், தக்காளி சூப் அல்லது தக்காளி ஜூஸ் என பல வழிகளில் சமைத்து சாப்பிடலாம். தக்காளியில், 'விட்டமின் இ, சி, ஏ, தையமின், நியாசின், மெக்னீசியம், பாஸ்பரஸ், தாமிரம்' ஆகிய எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

wear and tear,pain,bones,discoloration,tomatoes,food ,தேய்மானம், வலி, எலும்புகள், நிறமாற்றம், தக்காளி, உணவு

ஆனால், தக்காளி அதிகளவில் சாப்பிட்டால் ஏற்படும் பின்விளைவுகள் பற்றி தெரிந்து கொள்வோம். அடிக்கடி தக்காளியை அதிகளவில் உணவில் சேர்த்துக் கொண்டால், சருமத்தில் அலர்ஜியை ஏற்படுத்தி, இருமல், தும்மல், தொண்டை எரிச்சல் போன்ற பிரச்சனையை உருவாக்கும்.

தக்காளியில் உள்ள லைகோபென் சருமத்தில் நிறமாற்றத்தை ஏற்படுத்தி விடும். தக்காளியில் உள்ள ஆசிட் சிறுநீர்ப்பையில் தொற்றை ஏற்படுத்தி விடும். தக்காளியை அதிகளவில் உணவில் சேர்த்துக் கொள்ளக்கூடாது.

ஏனென்றால், தக்காளியில் அல்கலாய்டு அதிகம் உள்ளது. இவை உடலில் கால்சியம் பற்றாக்குறையை ஏற்படுத்தி, எலும்புகளில் தேய்மானம் மற்றும் வலியை உண்டாக்கிவிடும்.

Tags :
|
|