Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • கல்லீரல் சிறந்த முறையில் செயலாற்ற உதவும் அத்திப்பழம்

கல்லீரல் சிறந்த முறையில் செயலாற்ற உதவும் அத்திப்பழம்

By: Nagaraj Wed, 21 Sept 2022 9:33:44 PM

கல்லீரல் சிறந்த முறையில் செயலாற்ற உதவும் அத்திப்பழம்

சென்னை: அத்தி எளிதில் ஜீரணமாவதுடன் கல்லீரல், மண்ணீரல் போன்ற ஜீரண உறுப்புகளை நல்ல முறையில் சுறுசுறுப்புடன் செயலாற்றச் செய்கிறது. ஆகையால் ஈரல், குலைக்கட்டி கண்ட குழந்தைகளும் இக்கனிகளை கொடுக்கலாம்.

சிறுநீரகத்தில் கல்லடைப்பு போன்ற தடங்கல்களை அகற்றிச் சிறுநீரைப் பெருக்குகிறது. பெருங்குடலில் ஆங்காங்கே, இறுகிய கழிவுப் பொருட்களை பக்குவப்படுத்தி, இளக்கி, வியர்வையாகவும், சிறுநீராகவும், மலமாகவும் வெளியேற்றி குடலை மிருதுவாகச் செய்கிறது.

தினசரி 2 பழங்களை சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். உடலும் வளர்ச்சி அடைந்து பருமனடையும். மலச்சிக்கலை நீக்க உணவிற்குப் பிறகு சிறிதளவு அத்தி விதைகளைச் சாப்பிடலாம். நாள்பட்ட மலச்சிக்கலை குணமாக்க 5 பழங்களை இரவில் சாப்பிட வேண்டும்.

figs,nutrients,quadruple,nutrients,liver inflammation ,அத்திப்பழம், சத்துக்கள், நாலு மடங்கு, ஊட்டச்சத்துக்கள், கல்லீரல் வீக்கம்

போதைப் பழக்கம் மற்றும் இதர வியாதிகளால் ஏற்படும் கல்லீரல் வீக்கத்தை குணமாக்க அத்திப்பழங்களை காடியில் (வினிகர்) ஒருவாரம் வரை ஊற வைக்க வேண்டும். அதன்பின் தினசரி இரண்டு பழங்களை ஒருவேளை சாப்பிடலாம். தினசரி இரண்டு அத்திப்பழங்களை சாப்பிட்டு வந்தால், உடல் பருமனாகும். இதில் முழு அளவு ஊட்டச்சத்து இருக்கின்றது.

இதில் புரோட்டீன், சர்க்கரை சத்து, கால்ஷீயம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச் சத்து அதிக அளவில் இருப்பதாகவும், மற்ற பழங்களைவிட அத்திப்பழத்தில் இந்த சத்துக்கள் நாலு மடங்கு அதிகமாக இருப்பதாகவும் ஆய்வகள கூறுகின்றன. இதைத் தவிர வைட்டமின் ஏ, வைட்டமின் சி அதிக அளவில் உண்டு. சீமை அத்திப்பழம் வெண்குஷ்டத்தை குணமாக்குகிறது.

Tags :
|