Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • வைட்டமின் பி.12 அடங்கிய தயிர் அளிக்கும் ஆரோக்கிய நன்மைகள்

வைட்டமின் பி.12 அடங்கிய தயிர் அளிக்கும் ஆரோக்கிய நன்மைகள்

By: Nagaraj Tue, 25 Oct 2022 08:15:26 AM

வைட்டமின் பி.12 அடங்கிய தயிர் அளிக்கும் ஆரோக்கிய நன்மைகள்

சென்னை: பாலைவிட தயிர் பலமடங்கு சிறப்பானது, ஆரோக்கியம் நிறைந்தது. தயிரில் உள்ள புரோட்டீன், பாலில் உள்ள புரோட்டீனை விட சீக்கிரமாகவே ஜீரணமாகிவிடும். தயிர் குளிர்ச்சியானது மட்டுமல்ல, நல்ல ஜீரண சக்தியை தரக்கூடியதாகும்.

பால் சாப்பிட்டால் ஒரு மணி நேரத்தில், 32 சதவீதம் பால்தான் ஜீரணமாகும். ஆனால், தயிர் சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில் 91 சதவீதம் ஜீரணிக்கப்பட்டு விடும். பாலைத் தயிராக மாற்றும் பாக்டீரியா, குடலில் உருவாகும் நோய் கிருமி பாக்டீரியாவின் வளர்ச்சியை தடுக்கிறது. தயிரில் இருக்கும் பாக்டீரியா ஜீரண சக்தியை அதிகரித்து, நன்மை செய்யும் பாக்டீரியாவை உருவாக்குகிறது.

nutrients,essential,phosphorus,magnesium,ore ,ஊட்டச்சத்துக்கள், அத்தியாவசியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், தாது

எனவே தான் வயிறு சரியில்லாத பொழுது வெறும் தயிர் சோறு மட்டுமாவது உணவாக உட்கொள்ளும்படி மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். தயிரை தினமும் உணவின் ஒரு அங்கமாக சேர்த்துக்கொள்வதால் பல நன்மைகளைப் பெறலாம். குறிப்பாக தயிரில் வைட்டமின் பி-12, கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம் மற்றும் தாது உப்புகள் உள்ளன. இவை உடலுக்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துகளாகும்.

தயிரில் நிறைவாக உள்ள கால்சியம் சத்து எலும்பு மற்றும் பற்களின் ஆரோக்கியத்திற்கு உதவும். மன அழுத்தம், சோர்வை உண்டாக்கும் கார்டிசோல் என்னும் ஹார்மோன் சுரத்தலை தயிர் கட்டுப்படுத்துகிறது. தயிரில் வைட்டமின் பி-12, கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம் மற்றும் தாது உப்புகள் உள்ளன. இவை உடலுக்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துகளாகும்.

Tags :