Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • நோய் எதிர்ப்பு சக்தியை உடலுக்கு வழங்கும் தன்மை கொண்ட புதினா

நோய் எதிர்ப்பு சக்தியை உடலுக்கு வழங்கும் தன்மை கொண்ட புதினா

By: Nagaraj Tue, 25 Oct 2022 11:28:30 PM

நோய் எதிர்ப்பு சக்தியை உடலுக்கு வழங்கும் தன்மை கொண்ட புதினா

சென்னை: புதினா நோய் எதிர்ப்பு சக்தியை இயற்கையாகவே உடலுக்கு வழங்கும் தன்மை கொண்டது. இதில் உள்ள இயற்கையான மருத்துவகுணங்கள் உடலுக்கு வலிமையை தருகிறது.


புதினா கீரையில் நீர்ச்சத்து, புரதம், கொழுப்பு கார்போஹைடிரேட், நார்ப் பொருள் உலோகச் சத்துக்கள், பாஸ்பரஸ், கால்சியம் இரும்புச் சத்துக்களும், வைட்டமின் ஏ, நிக்கோட்டினிக் ஆசிட், ரிபோ மினேவின், தயாமின் ஆகிய சத்துக்களும் அடங்கியுள்ளன. புதினாக் கீரையைத் துவையலாகவோ, சட்னியாகவோ பயன்படுத்தினால் புதினாவின் பொதுக்குணங்கள் அனைத்தும் எளிதில் கிடைத்துவிடுகிறது. புதினாவை நிழலில் உலர்த்தி வைத்துக் கொண்டு கஷாயமாகத் தயாரித்து 30 மில்லி முதல் 60 மில்லி வரை கொடுத்து வந்தால் காய்ச்சல் தணியும்.

body heat,immunity,mint,nutrients ,உடல் உஷ்ணம், ஊட்டச்சத்துக்கள், நோய் எதிர்ப்பு சக்தி, புதினா

மூச்சுத்திணறல் நிற்க வேண்டுமானால், புதினா இலையைச் சிறிதளவு எடுத்து மூன்று மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து இந்த ஊறல் குடிநீரைக் குடித்தால் மூச்சுத்திணறல் நீங்கும். கைப்பிடியளவு புதினாக் கீரையைச் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி எடுத்துக் கொண்டு ஒரு எலுமிச்சம் பழச்சாற்றை விட்டுச் சாப்பிட்டு வந்தால் வாய் வேக்காளம் குணமாகும்.

புதினாவை நீர் விடாமல் அரைத்து வெளி உபயோகமாகப் பற்றுப் போட்டால், தசைவலி, நரம்புவலி, தலைவலி, கீல்வாத வலிகளின் வேதனை குறையும். புதினாவை நிழலில் காயவைத்து பாலில் சேர்த்து கொதிக்கவைத்து டீக்குப் பதிலாக அருந்தி வந்தால். உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். சிறு நீர் கழிப்பதில் எரிச்சல் உள்ளவர்கள் புதினாக் குடிநீர் தயார் செய்து குடித்து வர எரிச்சல் தணியும். உடல் உஷ்ணம் தணியும்.

Tags :
|