Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • நார்ச்சத்து நிறைந்த பலாப்பழத்தில் நிறைந்துள்ள மருத்துவக்குணம்

நார்ச்சத்து நிறைந்த பலாப்பழத்தில் நிறைந்துள்ள மருத்துவக்குணம்

By: Nagaraj Sun, 07 Aug 2022 9:00:01 PM

நார்ச்சத்து நிறைந்த பலாப்பழத்தில் நிறைந்துள்ள மருத்துவக்குணம்

சென்னை: பலா மரத்தின் இலை, பிஞ்சு, காய், பால், வேர் ஆகியவை அனைத்தும் மருத்துவக் குணமுடையதாகும். பலாப் பிஞ்சை சமைத்து உணவுடன் சேர்த்து உண்டு வந்தால் தாது விருத்தியாகும். பித்த நோய்கள் அகலும். பசிமந்தம் இருப்பின் நீங்கிவிடும்.


பலாப் பழத்தைச் சிறிய அளவில் சாப்பிட்டால் மலச்சிக்கல் அகலும். பலாப்பழத்தில் நமது உடல் வளர்ச்சிக்கும் மிகவும் இன்றியமையாத வைட்டமின் ஏ யும் சுண்ணாம்புச் சத்தும் அதிக அளவில் உண்டு.


நமது உடலில் ஓடும் ரத்தத்தில் வெள்ளையணுக்களின் உற்பத்தி குறைவால் ரத்த சோகை நோய் அல்லது குறைபாடு ஏற்படுகிறது. பலாப்பழத்தில் வைட்டமின் எ, சி, ஈ, கே மற்றும் மக்னீசியம், பாந்தோதீனிக் அமிலம், செம்பு சத்து போன்ற பல சத்துக்கள் நிரம்பியிருக்கின்றன.

vitamin,nutrients,jackfruit,cough,asthma ,வைட்டமின், சத்துக்கள், பலாப்பழம், இருமல், ஆஸ்துமா

சூட்டையும், குளிர்ச்சியையும் கொடுக்கும் பழமாகும். இது அவரவர் உடல் வாகைப் பொறுத்து குளிர்ச்சியையும், சூட்டையும் தருவதாகும். இந்தப் பழத்தை அதிக அளவில் சாப்பிட கூடாது. அதிலும் குறிப்பாக வாத நோய் உள்ளவர்கள் சாப்பிடவே கூடாது.

பலாப்பழச் சுளையை இரவு வேளையில் தேனில் ஊற வைத்துக் காலையில் வெறும்வயிற்றில் சாப்பிட்டால் இருமல், ஆஸ்துமா போன்ற மூச்சு சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும். பலாப்பழங்களை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு இந்த குடல் புற்று ஏற்படுவதற்கான ஆபத்து வெகுவாக குறைகிறது.

வைட்டமின் பி, சி போன்ற சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. சுண்ணாம்புச் சத்தும், இரும்புச் சத்தும் கொண்டு திகழும் இப்பழம் வாயுவை ஓரளவு உண்டு பண்ணுடையதாக இருந்தாலும், ரத்த விருத்திக்குச் சிறந்து விளங்குவதாகும்.

Tags :
|