Advertisement

வெறும் தண்ணீரில் உடலுக்கு இத்தனை நன்மைகள்

By: vaithegi Tue, 04 Oct 2022 7:55:27 PM

வெறும் தண்ணீரில் உடலுக்கு இத்தனை நன்மைகள்


மனித மூளை சரியாக செயல்படுவதற்கும் உடலில் உள்ள ஹார்மோன்களை சம அளவில் சுரக்க வைப்பதற்கும் நீர்ச்சத்து முக்கிய காரணியாக இருக்கிறது. அதிக அளவில் தண்ணீர் குடிப்பதும் தண்ணீரே குடிக்காமல் இருப்பதும் உடலளவிலும் மனதளவிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும்.

முக்கியமாக சரியான அளவில் தண்ணீர் எடுத்துக் கொள்ளாத போது நம்முடைய மனதில் குழப்பங்களும் தேவையற்ற கோபங்களும் ஏற்படுவதாக சமீபத்திய ஆய்வுகள் நிரூபிக்கின்றன. அதில் தினசரி ஒருவர் சரியான அளவில் தண்ணீர் பருகும் போது அவரது உடலின் நீர்ச்சத்து சமப்படுத்தப்பட்ட ஹார்மோன்கள் மிக சரியான அளவில் சுரப்பதாக தெரிவித்துள்ளார். ஹார்மோன்கள் சம அளவில் இருப்பதால் உடலுடைய அனைத்து சுரப்பிகளும் சரியாக வேலை செய்வதினால் உடல் ஆரோக்கியமும் நன்றாகவே இருப்பதாக கண்டறிந்துள்ளார்.

water,goodness ,தண்ணீர் , நன்மை

மனித மூளை சரியாக செயல்படுவதற்கும் உடலில் உள்ள ஹார்மோன்களை சம அளவில் சுரக்க வைப்பதற்கும் நீர்ச்சத்து முக்கிய காரணியாக இருப்பதாக தெரிவித்துள்ளார். இவ்வாறு நீர்ச்சத்து குறையும் பட்சத்தில் மூளையினுடைய சமநிலை பாதிக்கப்பட்டு அது நேரடியாக உடலில் ஹார்மோன் சுரப்பதை பாதிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

தண்ணீர் சரியான அளவில் குடிப்பதால் உடலில் உள்ள ஸ்ட்ரெஸ் ஹார்மோன்கள் கணிசமாக குறைக்கப்படுகிறது. ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்கவும் மன அழுத்தம் ஏற்படுவது தடுக்கவும் உதவும் கார்ட்டிசால் எனப்படும் பொருளின் அளவையும் அது கட்டுப்படுத்துகிறது. மேலும் நீர்ச்சத்து சமநிலையில் இருக்கும்போது மூளை மற்றும் முதுகு தண்டில் ஏற்படும் காயங்களில் இருந்து பாதுகாப்பு கிடைக்கிறது. மேலும் வளர்ச்சி அதிகமாகுவதால் மூளையில் அதிகமாக தேங்கும் கழிவுகளையும் நீக்க உதவுகிறது. உடலெங்கும் சீரான இரத்த ஓட்டம் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்படுத்துதல், ரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜன் உடலெங்கும் பரவச் செய்தல், வைட்டமின்கள் மற்றும் மினரல்களை சரியான அளவில் வைத்திருத்தல் ஆகிய நன்மைகளும் இதனால் ஏற்படுகின்றன.

மேலும் சரியான அளவில் தண்ணீர் குடிக்காத போதும் அல்லது குடித்த தண்ணீர் அதிக அளவில் சிறுநீர் மாற்றம் வியர்வையாக வெளியேறுவதாலும் உடலில் நீர் சத்து குறைபாடு ஏற்படலாம். மறு நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டால் அதிகமான தாகம்,மயக்கம், சோர்வு, தலை சுற்றுதல், வாயில் வறட்சி மற்றும் உதடு மஞ்சள் நிறத்தில் மாறுவது ஆகியவை ஏற்படலாம்.

Tags :
|