Advertisement

மூளையின் இயக்கத்தை அதிகரிக்கும் சில எளிய உணவுகள்

By: Nagaraj Fri, 04 Dec 2020 4:19:09 PM

மூளையின் இயக்கத்தை அதிகரிக்கும் சில எளிய உணவுகள்

மூளையின் இயக்கத்தை அதிகரிக்கும் சில எளிய உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் எப்போதும் இளமையுடன் இருக்கலாம்.

உடலின் இயக்கத்தையும், செயல்பாட்டையும் கட்டுப்படுத்துவது உணவுதான். என்னென்ன மாதிரியான உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்கிறோமோ அதற்கு ஏற்றாற்போலத்தான் உடலும் இயங்கும். உடலின் மொத்த இயக்கத்தையும் கட்டுப்படுத்துவது மூளைதான். தொடர்ந்து சரியாக சாப்பிடாமல் விட்டால் உடல் எப்போதும் சோர்வாகவே இருப்பதுடன் எந்த செயலிலும் நாட்டம் இருக்காது.

இதயம், நுரையீரல் மற்றும் மூளை அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்பட்டால்தான் சுறுசுறுப்பாக இயங்கமுடியும். மூளையின் இயக்கத்தை அதிகரிக்கும் சில எளிய உணவுகளை எடுத்துக்கொள்வதன் மூலம் எப்போதும் இளமையுடன் இருக்கலாம்.

diet,brain function,emotions,control,study ,உணவு, மூளையின் செயல்பாடு, உணர்வுகள், கட்டுப்படுத்துதல், ஆய்வு

மூளையின் இயக்கத்தை அதிகரிக்கும் உணவு என்றாலே லிஸ்ட்டில் முதலிடம் பிடிப்பது மீன்கள்தான். அதிலும் நல்ல கொழுப்பு என்று சொல்லப்படுகிற fat மீன்களில் அதிகமாகவே இருக்கிறது. குறிப்பாக சால்மன், மத்தி போன்ற மீன்களி ஒமேகா- 3 என்ற கொழுப்பு அமிலம் நிறைந்துள்ளது.

நமது மூளையில் கிட்டத்தட்ட 60% கொழுப்பால் ஆனது, அதிலும் ஒமேகா 3 அதிகம் நிறைந்தது. இந்த ஒமேகா 3 அமிலங்கள் நரம்பு செல்களை கட்டமைப்பதோடு, ஞாபக சக்தியையும் அதிகரிக்கிறது. இது வயதாவதையும், அல்சைமர் நோயையும் தடுக்கிறது.

தேவையான ஒமேகா 3 கிடைக்காதபோது, அது கற்றல் குறைபாடுகளுக்கும், மன சோர்வுக்கும் வழிவகுக்கிறது. அதிகப்படியான வேகவைத்த உணவுகளை சாப்பிடுபவர்களின் நரம்பு செல்கள் நன்கு கட்டமைக்கப்பட்டிருப்பதோடு, தெளிவான முடிவு எடுப்பது, ஞாபகத்திறன் மற்றும் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துதல் ஆகியற்றிலும் சிறந்து விளங்குவது ஆய்வில் தெரியவந்துள்ளது.

Tags :
|