Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • சளி, இருமல், தொண்டை வலி போன்றவற்றில் இருந்து விடுபட சில வழிகள்

சளி, இருமல், தொண்டை வலி போன்றவற்றில் இருந்து விடுபட சில வழிகள்

By: Nagaraj Fri, 27 Jan 2023 10:44:24 PM

சளி, இருமல், தொண்டை வலி போன்றவற்றில் இருந்து விடுபட சில வழிகள்

சென்னை: குளிர்கால தட்பவெப்பம் கிருமிகள் பெருக்கத்திற்கு ஏதுவான காலமென்பதால் விரைவில் நமது உடலில் புகுந்து நோய்களை உண்டாக்குகின்றன.

சளி பிடித்தால், நமது உடலிலுள்ள வெள்ளையணுக்களே அக்கிருமிகளுடன் சண்டையிடும். அவற்றை எதிர்த்து போரிட ஏதுவாக நமது மூலிகைகளை அவற்றிற்கு தரும் போது வெள்ளையணுக்கள் பலம் பெற்று கிருமிகளைவெளியேற்றும். இது நடப்பதற்கு குறைந்தது 3 -5 நாட்களாகும்.

இப்படி இயற்கையாக நடக்கும் நிகழ்வுகளை நாம் மாத்திரைகள் கொண்டுதடுக்கும்போது, வெள்ளையணுக்கள் எதிர்த்து போரிடாமல் சோம்பேறியாகும். நமது உடல் எல்லாவ்ற்றிற்கும் மாத்திரைகளையே எதிர்பார்க்கும். ஆகவேமுடிந்தவரை மாத்திரைகளை தவிர்த்து இயற்கை வைத்தியங்களை முயற்சியுங்கள். வெற்றிலையில் மிளகு வைத்து மென்று சாறை விழுங்கலாம்.

கொய்யாப்பழத்தை மிளகுத் தூள் தொட்டு சாப்பிட, நுரையீரலில் உள்ள சளிவெளியேறி, இருமல் பிரச்சனையில் இருந்து தீர்வு கிடைக்கும். ஆரஞ்சு ஜூஸில் தேன் மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கலந்து குடித்தால், சளி, இருமல், தொண்டை வலி போன்றவற்றில் இருந்து விடுபடலாம்.

cough,phlegm,cure,panangalkandu,itham,water ,இருமல், சளி, குணமாகும், பனங்கல்கண்டு, இதம், தண்ணீர்

ஒரு டம்ளர் அன்னாசிச்சாறுடன் மிளகுத்தூள் சேர்த்து தினமும் அருந்தி வந்தால்உடல் சோர்வு மறையும் சளித்தொல்லை குணமாகும். வெங்காயத்தை தீயில் சுட்டு சாப்பிடுவதன் மூலம், இருமல் மற்றும் சளியில் இருந்து விடுதலை கிடைக்கும்.

பசும் பாலை நன்கு கொதிக்க வைத்து, அதில் தேன் கலந்து குடிப்பதன் மூலமும் சளி, இருமல் தொல்லையில் இருந்து விடுபடலாம். கற்பூரவள்ளி இலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்நீரைக் குடிப்பதன்மூலமும் விரைவில் சளித் தொல்லை நீங்கும். வெற்றிலையை சாறு எடுத்து, தேன் கலந்து குடித்தாலும், இருமலில் இருந்துஉடனடி நிவாரணம் கிடைக்கும்.

டீத்தூளுடன் ஏலக்காய் பட்டை கிராம்பு சுக்கு மிளகு தட்டி சேர்த்து தண்ணீர் ஊற்றி கொதிக்கவைத்து பால் சேர்த்து குடித்தால் தொண்டைக்கு இதமாக இருக்கும். ஜலதோஷம் காய்ச்சல், தலைவலிக்கு பனங்கிழங்கை அவித்து காயவைத்து இடித்து பொடியாக்கி பனங்கல் கண்டு சேர்த்து சாப்பிட்டால் குணமாகும்.

Tags :
|
|
|
|