Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • பெண்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் உறுதுணையாக உள்ள சர்க்கரை வள்ளிக்கிழங்கு

பெண்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் உறுதுணையாக உள்ள சர்க்கரை வள்ளிக்கிழங்கு

By: Nagaraj Wed, 31 May 2023 7:36:10 PM

பெண்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் உறுதுணையாக உள்ள சர்க்கரை வள்ளிக்கிழங்கு

சென்னை: சர்க்கரை வள்ளிக்கிழங்கில் கொலஸ்ட்ரால் அளவுகள் மிகவும் குறைவாகவே உள்ளன. இது பெண்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் உறுதுணையாக உள்ளது.

ஒரு பெண்ணின் வயதுக்கேற்ப உடலில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்கின்றன இத்தகைய மாறுதல்களை சமாளிக்க ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் உங்களை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்வதுடன் உணவு முறையிலும் கூடுதல் அக்கறை செலுத்தினால் என்றும் ஆரோக்கியத்துடன் நீண்ட காலத்துக்கு வாழலாம்.

சர்க்கரை வள்ளிக்கிழங்கில் கொலஸ்ட்ரால் அளவுகள் மிகவும் குறைவாகவே உள்ளன. சர்க்கரை வள்ளி கிழங்கில் நார்ச்சத்து ஆன்டி ஆக்ஸிடெண்ட் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. சர்க்கரை வள்ளி கிழங்கை பெண்கள் தங்கள் உணவில் சேர்த்து வர ஒன்றல்ல ஏராளமான ஆரோக்கியமான நன்மைகளை பெறலாம்.

சரும அமைப்புக்கு வைட்டமின் ஏ மிகவும் அவசியமானது. இந்நிலையில் வைட்டமின் ஏ நிறைந்த சர்க்கரை வள்ளிகிழங்கை உங்கள் உணவில் சேர்த்து வர சரும அமைப்பு மேம்படும்.

sugar beet,thinking,memory,diet,stress ,சர்க்கரை வள்ளிக்கிழங்கு, நினைக்கும், நினைவாற்றல், உணவு, மன அழுத்தம்

இன்று பெரும்பாலான சரும பராமரிப்பு கிரீம்களில் இந்த வைட்டமின் ஏ அல்லது ரெட்டினால் சேர்க்கப்படுகின்றன. இது இளமையான பளபளப்பான சருமத்தை பெற உதவுகிறது. மேலும் உங்கள் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும்.

இரும்புச்சத்து நிறைந்த சர்க்கரைவள்ளி கிழங்கு பெண்கள் தங்கள் அன்றாட உணவில் தொடர்ந்து சேர்த்து வர உடலில் ஹீமோகுளோபின் அளவை கணிசமாக அதிகரிக்கலாம். மேலும் பெண்களின் நினைவாற்றலை மேம்படுத்தவும் இது உதவும். இதன் மூலம் ஞாபகம் மறதி போன்ற பிரச்சனைகளை பெண்கள் தவிர்க்கலாம். கர்ப்ப காலத்தில் ஏற்படும் இரும்புச் சத்து குறைபாட்டை போக்க கர்ப்பிணிகளுக்கும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு சாப்பிடலாம்.

சர்க்கரை வள்ளி கிழங்கில் உள்ள மெக்னீசியம் மன அழுத்தம் மற்றும் பதற்றத்தை குறைக்க உதவுகிறது. ஆகையால் மன அழுத்தத்திலிருந்து விடுபட நினைக்கும் பெண்கள் சர்க்கரை வள்ளிக்கிழங்கை தங்கள் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

Tags :
|
|