Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்து கொள்ள உதவும் நட்ஸ் வகைகள்

சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்து கொள்ள உதவும் நட்ஸ் வகைகள்

By: Nagaraj Tue, 15 Dec 2020 08:59:19 AM

சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்து கொள்ள உதவும் நட்ஸ் வகைகள்

நட்ஸ் வகைகள் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்து உடலின் வளர்சிதை மாற்றத்தை சமநிலைப்படுத்துகிறது.

நமது பாரம்பரிய சமையலில் கடைபிடித்த உணவு முறைகளை தற்போதைய வாழ்க்கை முறையில் கடைப்பிடிப்பது பலருக்கும் பெரிய சவாலாக உள்ளது. ஆனாலும் உடலை ஆரோக்கியமாகவும், இளமையாகவும் வைத்திருக்க வேண்டியது அவசியம் என்பதை நாம் உணர்ந்தே இருக்கிறோம்.

பொதுவாக அதிக கலோரிகளைக் கொண்ட உணவாகக் கருதப்படும் நட்ஸ், சமீபமாக தினசரி உணவின் அங்கமாக மாறி வருகிறது. நட்ஸ் வகைகள் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்து உடலின் வளர்சிதை மாற்றத்தை சமநிலைப்படுத்துகிறது என்று ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

nuts varieties,youth,health,heart disease,control ,
நட்ஸ் வகைகள், இளமை, ஆரோக்கியம், இதய நோய்கள், கட்டுப்பாடு

இரவு எளிதில் செரிமானம் ஆகும் உணவுகளை கொஞ்சமாக எடுத்துக் கொள்ளலாம். அத்துடன் உடலுக்கு ஆரோக்கியம் தரும் நட்ஸ் வகைகளை 5 அல்லது 6 எண்ணங்கள் மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்துகிறார்கள் மருத்துவ வல்லுனர்கள்.

இதனை தொடர்ந்து தினமும் சாப்பிட்டு வரும் பொழுது உடலுக்கு தேவையான ஆற்றல்கள் கிடைப்பதுடன் உணவில் ஏற்படும் சத்து பற்றாக்குறையை போக்கி உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. உடல் எடையை கட்டுக்கோப்பாக வைக்க உதவுகிறது. இதில் உள்ள வைட்டமின் ஈ இளமையை நீட்டிக்கச் செய்து ஆரோக்கியத்தை தக்க வைக்கிறது.

மேலும் கொட்டை பருப்பு வகைகள் மனதை அமைதி கொள்ளச் செய்து உடலை சுறுசுறுப்பாக்குகின்றன. பாதாம், முந்திரி, வால்நட், பிஸ்தா ஆகியவற்றில் ஒவ்வொன்றிலும் இரண்டிரண்டாக சாப்பிட்டு வரலாம். மேலும் உயர் ரத்த அழுத்தம், இதய நோய்கள், புற்றுநோய், நரம்பு மண்டல நோய்கள் மற்றும் சர்க்கரை நோய்களை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதோடு செரிமான மற்றும் இனப்பெருக்க மண்டலத்தின் இயக்கத்தையும் சீரடையச் செய்கிறது.

Tags :
|
|