Advertisement

10ம் வகுப்பு பொதுத்தேர்வு தள்ளி வைக்கப்பட வாய்ப்பு

By: Monisha Mon, 18 May 2020 12:54:08 PM

10ம் வகுப்பு பொதுத்தேர்வு தள்ளி வைக்கப்பட வாய்ப்பு

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதனால் தமிழகத்தில் நடைபெற இருந்த தேர்வு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த வாரத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 1ம் தேதி தொடங்கி 12ம் தேதி வரை நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்தது. மேலும் அதற்காக பல்வேறு ஏற்பாடுகளையும் செய்து வருகிறது.

ஆனால், தற்போது கொரோனா வைரஸ் பரவும் வேகம் அதிகரித்து வருவதால் பொதுத்தேர்வை இப்போது நடத்தக்கூடாது என பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் வந்து கொண்டிருகின்றது.

10th public exam,education minister,coronavirus,tamilnadu,postponed ,தமிழக அரசு ,10ம் வகுப்பு பொதுத்தேர்வு,கொரோனா வைரஸ்,தள்ளி வைக்கப்பட வாய்ப்பு,அமைச்சர் செங்கோட்டையன்

எனவே, தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தேர்வு நடைமுறைகள் குறித்து கல்வித்துறை அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்கு பிறகு அமைச்சர் செங்கோட்டையன் முதலமைச்சரை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.

முதல்வருடனான சந்திப்பின்போது, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளது. மேலும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தள்ளி வைக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Tags :