Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கு 11.85 லட்சம் பேர் மேல்முறையீடு செய்துள்ளனர்

கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கு 11.85 லட்சம் பேர் மேல்முறையீடு செய்துள்ளனர்

By: vaithegi Thu, 02 Nov 2023 1:46:18 PM

கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கு 11.85 லட்சம் பேர் மேல்முறையீடு செய்துள்ளனர்

சென்னை: முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின்‌ கடந்த 27.03.2023 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில்‌ மகளிர்‌ உரிமைத்தொகை குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. குடும்பத்திற்காக வாழ்நாள்‌ முழுவதும்‌ ஓயாமல்‌ உழைத்துக்கொண்டிருக்கும்‌ பெண்களின்‌ உழைப்பிற்கு அங்கீகாரம்‌ அளிக்கும்‌. வகையில்‌, அவர்களுக்கு ஆண்டிற்கு ரூபாய்‌ 12.000/- உரிமைத்தொகை வழங்கும்‌ கலைஞர்‌ மகளிர்‌ உரிமைத்‌ திட்டமானது பெண்களின்‌ வாழ்வாதாரத்தை மேம்படுத்தி.

இதையடுத்து வாழ்க்கைத்‌ தரத்தை உயர்த்தி, சமூகத்தில்‌ அவர்கள்‌ சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்கும்‌ உயரிய நோக்கம்‌ கொண்டது. கலைஞர்‌ மகளிர்‌ உரிமைத்தொகைத்‌ திட்டத்திற்கும்‌ தகுதியான பயனாளிகளைக்‌ கண்டறிவதற்கான விதிமுறைகள்‌ வகுக்கப்பட்டு, 1.63 கோடி விண்ணப்பங்கள்‌ பெறப்பட்டு, விசாரணைகள்‌ மேற்கொள்ளப்பட்டன.

Tags :