Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தேனியில் நேற்று 12 மாணவர்களுக்கு கொரோனா உறுதி..மொத்த பாதிப்பு 31ஆக உயர்வு

தேனியில் நேற்று 12 மாணவர்களுக்கு கொரோனா உறுதி..மொத்த பாதிப்பு 31ஆக உயர்வு

By: vaithegi Fri, 08 July 2022 08:40:51 AM

தேனியில் நேற்று 12 மாணவர்களுக்கு கொரோனா  உறுதி..மொத்த பாதிப்பு 31ஆக உயர்வு

தேனி: தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் படித்து வரும் சில மாணவர்களுக்கு கடந்த 2 நாட்களாகவே சளி, காய்ச்சல் பாதிப்பு இருந்தது. இதனையடுத்து அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில், 12 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது.

இதனால் 170 மாணவர்கள் படிக்கும் பள்ளியில் முதற்கட்டமாக 72 மாணவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் மேலும் 19 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதுடன், 9 மாணவர்களின் பெற்றோருக்கும் தொற்று உறுதிசெய்யப்பட்டது.

corona,student ,கொரோனா  ,மாணவர்

இதன் படி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்ட மாணவர்கள் அனைவரும் 12 வயதிற்கு உட்பட்டவர்கள். மாணவர்களுக்கு தீவிர பாதிப்பு இல்லாததால், அவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், பள்ளி வளாகம் மற்றும் தொற்றால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் வீடுகளின் சுகாதாரத்துறையினரால் கொரோனா தடுப்புப்பணிகள் மிக தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது. இந்த நிலையில், சம்மந்தப்பட்ட பள்ளிக்கு விடுமுறை அளிப்பது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் ஆலோசித்து வருகிறது

Tags :
|