எல்லை தாண்டியதாக தமிழக மீனவர்கள் 12 பேர் கைது
By: Nagaraj Thu, 23 Mar 2023 7:55:28 PM
யாழ்ப்பாணம்: 12 மீனவர்கள் கைது... யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டிய மீன்பிடியில் ஈடுபட்ட இரு இந்திய மீன்பிடிப் படகுகளுடன் 12 மீனவர்கள் கடற்படையினரால் பிடிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த 12 மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் இதுவரை காங்கேசன் துறைக்கு கொண்டு வரப்படவில்லை.கொண்டு வரப்பட்டதும் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட உள்ளனர்.
இவ்வாறு 1802 மற்றும் 65 ஆகிய இருபடகுகளே பிடிக்கப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
Tags :