- வீடு›
- செய்திகள்›
- 12ம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதியை அரசு தேர்வுகள் துறை அறிவிப்பு
12ம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதியை அரசு தேர்வுகள் துறை அறிவிப்பு
By: vaithegi Fri, 21 July 2023 4:02:37 PM
சென்னை: 12ம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் வரும் 24ம் தேதி வெளியிடப்படும் .... தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த மே மாதம் வெளியானது. இதில் தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 94.03% பேர் தேர்ச்சி பெற்றனர்.
இதனை அடுத்து அதில் மாணவர்கள் 91.45% , மாணவிகள் 96.38% தேர்ச்சி பெற்றிருந்தனர். இந்தாண்டும் வழக்கம்போல மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றனர். எனவே அதன்படி மாணவர்களை விட மாணவிகள் 4.93% அதிகம் தேர்ச்சி பெற்றனர்.
இச்சூழலில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி அடையாதவர்களுக்கு தடந்த ஜூன் 19-ந் தேதி துணைத்தேர்வு நடந்தது. 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெறாத 47,934 பேரும் விண்ணப்பித்து துணைத்தேர்வில் கலந்து கொள்ளலாம் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருந்த நிலையில் துணைதேர்வு நடத்தப்பட்டது.
இந்த நிலையில் வருகிற ஜூலை 24-ஆம் தேதி பிளஸ் 2 துணை தேர்வு முடிவுகள் வெளியாகும் என அரசு தேர்வுகள் துறை அறிவித்து உள்ளது. dge.tn.gov.in என இணையதளத்தில் பன்னிரண்டாம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகளை மாணவர்கள் அறியலாம் என் அரசு தேர்வுகள் இயக்ககம் தகவல் தெரிவித்து உள்ளது.