Advertisement

வேலூரில் வருகிற மே 15 உள்ளூர் விடுமுறை

By: vaithegi Tue, 09 May 2023 3:55:16 PM

வேலூரில் வருகிற மே 15 உள்ளூர் விடுமுறை

வேலூர் : சித்திரை மாதம் என்றாலே திருவிழாக்கள் அதிகமாக இருக்கும், அந்த வகையில் வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் ஸ்ரீ கங்கை அம்மன் கோவில் திருவிழா காரணமாக மே 15 உள்ளூர் விடுமுறை ....

வேலூர் மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், "வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகரத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள புகழ் வாய்ந்த ஸ்ரீ கெங்கையம்மன் கோவில் சிரசு ஊர்வல திருவிழா 15-ம் தேதி நடைபெறவுள்ளது. பொதுமக்கள், அரசு அலுவலர்கள் கலந்துக்கொள்ள வசதியாக, சிரசு ஊர்வல திருவிழா நடைபெறும் நாளான வருகிற 15-ம் தேதி வேலூர் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது

local holiday,vellore ,உள்ளூர் விடுமுறை,வேலூர்

இதனை அடுத்து அதற்கு பதிலாக (24.06.2023) சனிக்கிழமை அரசு அலுவலர்களுக்கு வேலை நாளாகவும், (25.06.2023) ஞாயிற்றுக்கிழமை அச்சக பணியாளர்களுக்கு வேலை நாளாகவும் அறிவிக்கப்படுகிறது.

மேலும் உள்ளூர் விடுமுறை அன்று கருவூலங்களிலும், சார்நிலை கருவூலங்களிலும் அரசு பாது காப்புக்கான அவசர அலுவலக பணிகளை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும்" என்று அதில் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் குறிப்பிட்டுள்ளார்.

Tags :