Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஜூன் மாதத்தை காட்டிலும் ஜூலை மாதத்தில் 27,269 பயணிகள் அதிகமாக சென்னை மெட்ரோ ரெயில்களில் பயணித்துள்ளனர்

ஜூன் மாதத்தை காட்டிலும் ஜூலை மாதத்தில் 27,269 பயணிகள் அதிகமாக சென்னை மெட்ரோ ரெயில்களில் பயணித்துள்ளனர்

By: vaithegi Mon, 01 Aug 2022 3:45:21 PM

ஜூன் மாதத்தை காட்டிலும் ஜூலை மாதத்தில் 27,269 பயணிகள் அதிகமாக சென்னை மெட்ரோ ரெயில்களில் பயணித்துள்ளனர்

சென்னை: சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன இணை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ ரெயில் பயணிகளுக்கும் ஒரு நம்பகமான பாதுகாப்பான போக்குவரத்து வசதியை அளித்து கொண்டு வருகிறது.

இதில் 1.1.22 முதல் 30.04. 2022 வரை மொத்தம் 1,47,19,991 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர். 1.5.22 முதல் 31.05. 2022 வரை மொத்தம் 47,87,846 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர். 1.6.22 முதல் 30.06. 2022 வரை மொத்தம் 52,90,390 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர். 1.7.22 முதல் 31.07.22 வரை மொத்தம் 53,17,659 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.

metro rail,passengers ,மெட்ரோ ரெயில்,பயணிகள்

இதை அடுத்து அதிகபட்சமாக 27-ந் தேதி அன்று 1,97,307 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர். மேலும், ஜூன் மாதத்தை காட்டிலும் ஜூலை மாதத்தில் 27,269 பயணிகள் அதிகமாக பயணித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து ஜூலை மாதத்தில் மட்டும் க்யூ ஆர் குறியீடு பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 16,11,440 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர். பயண அட்டை பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 32,81,792 பயணிகள் பயணம் செய்துள்ளனர். மெட்ரோ ரெயில்களில் பயணிப்பவர்களுக்கு க்யூ ஆர் குறியீடு பயணச்சீட்டு மற்றும் பயண அட்டைகளை பயன்படுத்தி பயணிக்கும் பயணிகளுக்கு 20 சதவீத கட்டணத்தள்ளுபடி வழங்கப்படுகிறது என அதில் கூறப்பட்டுள்ளது.

Tags :