Advertisement

மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்வு

By: Nagaraj Wed, 28 Sept 2022 5:24:20 PM

மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்வு

புதுடில்லி: 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வு... மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு வழங்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

அகவிலைப்படி 4% உயர்த்தப்பட்டதன் மூலம் 47.68 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 68.62 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

recommendation,pay commission,subsidy,raised,central govt ,பரிந்துரை, ஊதியக்குழு, அகவிலைப்படி, உயர்த்தப்பட்டுள்ளது, மத்திய அரசு

மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் அகவிலைப்படி 34 சதவீதமாக இருந்தது. இது தற்போது 4 சதவீதம் உயர்த்திய பின்னர், 38 சதவீதமாக அதிகரித்துள்ளது.

2022, ஜூலை 1-ஆம் தேதியை அடிப்படையாகக் கொண்டு இந்த அகவிலைப்படி வழங்கப்படும். 7-ஆவது மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரைப்படி, அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது.

Tags :
|