Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • திருப்பூரில் ஒரே வாரத்தில் தக்காளி விலை 5 மடங்கு உயர்வு

திருப்பூரில் ஒரே வாரத்தில் தக்காளி விலை 5 மடங்கு உயர்வு

By: vaithegi Sun, 04 Sept 2022 10:17:51 PM

திருப்பூரில் ஒரே வாரத்தில் தக்காளி விலை 5 மடங்கு உயர்வு

திருப்பூர் : தக்காளி விலை உயர்வு .... திருப்பூரில் தக்காளி விலை கிடு, கிடுவென அதிகரித்துள்ளதால் இல்லத்தரசிகள் பெரும் கவலையடைந்துள்ளனர். கிலோ ரூ.25-க்கு விற்பனை வீடுகள் மற்றும் ஓட்டல்களில் செய்யும் பெரும்பான்மையான சமையல் உணவு பொருட்களில் தக்காளி இடம் பெறும்.

இதை அடுத்து அந்த வகையில் திருப்பூர் தென்னம்பாளையம் மற்றும் புதிய பஸ் நிலையம் பகுதியில் உள்ள உழவர் சந்தைகளில் அதிக அளவில் தக்காளி விற்பனையாவது வழக்கம்.எனவே இதற்காக அங்கு தக்காளி கூடை, கூடையாக கொண்டு வரப்படும். கடந்த வாரம் வரை ஒரு கிலோ தக்காளி ரூ.5 மற்றும் ரூ.10-க்கு விற்பனையாகி வந்த நிலையில் நேற்று ஒரு கிலோ தக்காளி ரூ.25-க்கு விற்பனை செய்யப்பட்டது.

tomato,tirupur ,தக்காளி ,திருப்பூர்

ஒரே வாரத்தில் தக்காளி விலை 5 மடங்கு ஏறியதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனையடுத்து இது பற்றி காய்கறி வியாபாரிகள் கூறியதாவது:- திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாகவே மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக விவசாயிகள் பயிரிட்ட தக்காளி பல இடங்களில் அழுகி வீணாகியது.

எனவே இதன் காரணமாக தக்காளியின் வரத்து குறைந்துள்ளது. மேலும் வரத்து குறைவின் காரணமாக தக்காளியின் விலையும் அதிகரித்து. இதைத்தொடர்ந்து வருகிற நாட்களில் மேலும் மழை பெய்யும் பட்சத்தில் வரத்து குறைந்தால், இன்னும் தக்காளியின் விலை உயர கூடும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags :
|