Advertisement

கடந்த மாதம் மெட்ரோ ரயில்களில் 63.69 லட்சம் பயணிகள் பயணம்

By: vaithegi Wed, 01 Mar 2023 4:44:49 PM

கடந்த மாதம் மெட்ரோ ரயில்களில் 63.69 லட்சம் பயணிகள் பயணம்

சென்னை மெட்ரோ ரயில்களில் கடந்த மாதம் 63.69 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனை அடுத்து இது பற்றி சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளதாவது: “01.01.2023 முதல் 31.01.2023 வரை மொத்தம் 66,07,458 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். 01.02.2023 முதல் 28.02.2023 வரை மொத்தம் 63,69,282 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். அதிகபட்சமாக 10.02.2023 அன்று 2,61,668 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்

2023, பிப்ரவரில் மட்டும் க்யுஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 20,20,027 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். பயண அட்டைகளை (Travel Card Ticketing System) பயன்படுத்தி 39,85,113 பயணிகள் பயணித்துள்ளார்கள்.

passengers,metro rail ,பயணிகள் , மெட்ரோ ரயில்


இதையடுத்து நடப்பாண்டில் கடந்த ஜனவரில் 66 லட்சத்து 7 ஆயிரத்து 458 பயணிகள் பயணித்துள்ளனர். பிப்ரவரில் 63 லட்சத்து 69 ஆயிரத்து 282 பயணிகள் பயணித்துள்ளனர். கடந்த பிப்ரவரி மாதம் 28 நாட்கள் என்பதால் ஜனவரி மாத்தை விட பிப்ரவரி மாதத்தில் பயணிகளின் எண்ணிக்கை சற்று குறைவாகவே காணப்படும்.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மெட்ரோ ரயில்களில் பயணிப்பவர்களுக்கு க்யுஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு மற்றும் பயண அட்டைகளை பயன்படுத்தி பயணிக்கும் பயணிகளுக்கு 20% கட்டணத் தள்ளுபடி வழங்கப்படுகிறது. மெட்ரோ ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்களை பராமரிப்பதில் மிகுந்த ஒத்துழைப்பு நல்கிவரும் அனைத்து பயணிகளுக்கும் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றி ” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :