Advertisement

இலங்கையில் ஆசிரியர் மாணவர் நலன் கருதி புதிய திட்டம்

By: vaithegi Fri, 29 July 2022 7:42:02 PM

இலங்கையில் ஆசிரியர் மாணவர் நலன் கருதி புதிய திட்டம்

இலங்கை: கொரோனா காரணமாக மாணவர்களுக்கு ஏற்பட்ட கல்வி இடைவெளியை ஈடுசெய்யும் பொருட்டு மாணவர்களுக்கு புதிய திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் மாணவர்கள் உற்சாகமாக பள்ளிக்கு வருகின்றனர்.

இந்த நிலையில் இலங்கையில் ஆசிரியர் மாணவர் நலன் கருதி புதிய திட்டம் ஒன்று அமலுக்கு வர உள்ளது. ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பாடசாலைக்கு செல்வதற்காக “பாடசாலை சேவை” என்ற பெயரில் புதிய தனியார் பஸ் சேவை ஆகஸ்ட் மாதம் முதலாம் ஆம் தேதி முதல் ஆரம்பிக்க நடவடிக்கை ஒன்று எடுக்கப்பட்டுள்ளது.

sri lanka,teacher,student,welfare ,இலங்கை,ஆசிரியர், மாணவர், நலன்

அந்த வகையில், ஆகஸ்ட் மாதம் 01 ஆம் தேதி முதல் “பாடசாலை சேவை” பஸ்களின் பெயர்ப் பலகையில் குறித்த பாடசாலைகளின் பெயர்களைக் குறிப்பிட்டு தினமும் 2 முறை இந்த புதிய பஸ் சேவை இடம் பெற உள்ளது. எனவே, ஆசிரியர்களும், மாணவர்களும் இந்த பஸ் சேவைக்கு கட்டணம் செலுத்தி எவ்வித அசௌகரியமும் இன்றி இந்த போக்குவரத்து சேவையை பெற்றுக் கொள்ள முடியும் என கல்வி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் மாணவர்கள் எவ்வித அசோகரியமும் இன்றி பாடசாலைக்கு செல்வதற்கு முறையான போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது, தொடர்பாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Tags :