Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தொலைநோக்கு பார்வையை பிரதிபலிக்கும் பதவி... ராகுல் அட்வைஸ்

தொலைநோக்கு பார்வையை பிரதிபலிக்கும் பதவி... ராகுல் அட்வைஸ்

By: Nagaraj Thu, 22 Sept 2022 7:00:09 PM

தொலைநோக்கு பார்வையை பிரதிபலிக்கும் பதவி... ராகுல் அட்வைஸ்

கேரளா: நிறுவன பதவி மட்டுமல்ல... காங்கிரஸ் தலைவர் என்பது நிறுவனப் பதவி மட்டுமல்ல, இந்தியாவின் நம்பிக்கை அமைப்பு மற்றும் தொலைநோக்குப் பார்வையைப் பிரதிபலிக்கும் ஒரு சித்தாந்தப் பதவி என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் வருகிற அக்டோபர் 17 ஆம் தேதி நடைபெற உள்ளது. காங்கிரஸ் தலைவர் தேர்தலில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் போட்டியிடுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் திக்விஜய் சிங், மணீஷ் திவாரி ஆகியோரது பெயர்களும் அடிபடுகின்றன.

congress,position,faith,organization,vision,vision ,
காங்கிரஸ், பதவி, நம்பிக்கை, அமைப்பு, பார்வை, தொலைநோக்கு

இந்நிலையில், கேரளத்தில் ஒற்றுமை நடைப் பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் தேர்தல் குறித்து போட்டியாளர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். 'காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடக் கூடியவர்களுக்கு எனது அறிவுரை. நீங்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் இந்தியாவின் ஒரு குறிப்பிட்ட பார்வையை வரையறுக்கும் நிலையை எடுக்கிறீர்கள்.

இது ஒரு நிறுவனப் பதவி மட்டுமல்ல, இது ஒரு சித்தாந்தப் பதவியாகும். இது இந்தியாவின் நம்பிக்கை அமைப்பு மற்றும் பார்வையைப் பிரதிபலிக்கிறது' என்றார்.காங்கிரஸில் ஒருவருக்கு ஒரு பதவி என்று எடுக்கப்பட்ட முடிவு காங்கிரஸ் தலைவர் பதவியிலும் பின்பற்றப்படும் என்று நம்புவதாகவும் குறிப்பிட்டார்.

Tags :
|
|