Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நீல நிற விழிகளால் கைவிட்ட கணவர்; குழந்தைகளுடன் தவிக்கும் நைஜீரிய பெண்

நீல நிற விழிகளால் கைவிட்ட கணவர்; குழந்தைகளுடன் தவிக்கும் நைஜீரிய பெண்

By: Nagaraj Sat, 08 Aug 2020 08:42:18 AM

நீல நிற விழிகளால் கைவிட்ட கணவர்; குழந்தைகளுடன் தவிக்கும் நைஜீரிய பெண்

கண்களின் நிறத்தால் கணவர் பிரிந்து சென்றதால் குழந்தைகளுடன் தவித்து வருகிறார் நைஜீரிய பெண் ஒருவர்.

உலகம் முழுவதும் கண்களின் நிறத்தைக் கொண்டு பல்வேறு பழங்கதைகள் புழக்கத்தில் உள்ளன. நீல நிற கண்களுக்கு எப்போதுமே தனிச்சிறப்பு உண்டு. நீல நிற விழிகளை உடையவர்கள் எளிதில் மற்றவர்களை வசீகரிப்பவர்களாக இருப்பார்கள். தேவதைகள் நீல நிறக் கண்களைத் தான் பெற்றிருப்பார்கள் என்றும் சொல்வார்கள்.

நீல நிற விழிகளைக் கொண்ட பெண்ணைத் திருமணம் செய்தவர், குழந்தைகளும் அதே போன்று நீல நிற விழிகளுடன் பிறந்ததால் குடும்பத்தையே புறக்கணித்துக் கைவிட்டுச் சென்ற அதிர்ச்சிகரமான சம்பவம் நைஜீரியாவின் லாகோஸ் நகரில் நிகழ்ந்துள்ளது. சுற்றுச் சூழல், கருவிழியில் உள்ள மெலனின் மற்றும் புரோட்டீன்களின் சேர்க்கையைப் பொருத்து ஒவ்வொரு இடத்தில் உள்ளவர்களும் ஒவ்வொரு நிறங்களைக் கொண்ட கண்களைப் பெற்றிருப்பர். சிலர் மரபியல் ரீதியாகவும் வித்தியாசமான நிறங்களைக் கொண்டவர்களாகப் பிறப்பர்.

blue eyes,husband,neglect,nigerian woman ,நீலநிற விழிகள், கணவன், புறக்கணிப்பு, நைஜீரியா பெண்

ஐரோப்பா, அமெரிக்கா உள்ளிட்ட பகுதிகளில் நீல நிறக் கண்களைக் கொண்டவர்களை அதிகம் காணலாம். ஆனால், ஆப்பிரிக்காவில் நீல நிறங்களைக் கொண்டவர்களைப் பார்ப்பது அரிதானது. பழமைவாதத்தில் மூழ்கிய ஆப்பிரிக்கர்கள் மத்தியில் நில நிறக் கண்களை அபசகுணமாகவும், குறைபாடாகவும் கருதும் பழக்கமும் இருந்து வருகிறது. நைஜீரியா, லகோஸ் நகரைச் சேர்ந்த பெண்மணி ரிஷிகாட். இவர் நீல நிற கண்களைக் கொண்டவர். இவரை அப்துல்வாய்சூ ஓமோ என்பவர் காதல் திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்துக்குப் பின் இருவரும் அன்பாகத் தான் குடும்பம் நடத்தியுள்ளனர். ஆனால், குழந்தைகளும் ரிஷிகாட்டைப் போலவே நீல நிறத்துடன் பிறந்ததால் இருவருக்குள்ளும் பிரச்னை அதிகமானது. அப்துல்வாய்சூவின் போக்கு நாளுக்கு நாள் மாறியது. ஒரு கட்டத்தில் அவர் நீல நிற விழிகளுடன் பிறந்த குழந்தைகளைக் காரணம் காட்டி குடும்பத்தைப் புறக்கணித்துவிட்டுச் சென்றுவிட்டார்.

குழந்தைகளை வளர்க்கும் நோக்கில் ரிஷிகாட் தன் தாய் வீட்டுக்கு வந்துவிட்டார். இது குறித்து ரிஷிகேட் கூறுகையில், “என் குடும்பத்தில் யாருக்கும் நீல நிற விழிகள் இருந்தது இல்லை. எனக்கு தான் இந்தப் பிரச்னை இருக்கிறது. என் குழந்தைகளும் நீல நிற விழிகளுடன் பிறப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை” என்று வேதனையுடன் கூறியுள்ளார்.

நீல நிற விழிகளுடன் பிறந்ததால் கணவனால் புறக்கணிக்கப்பட்ட பெண்ணைப் பற்றி நைஜீரியாவைச் சேர்ந்த ஆலபி ருக்காயத் என்ற கல்லூரி மாணவர் ஒருவர் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தார். இந்தத் தகவல் இப்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது.

Tags :