Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் ஜூலை 4ம் முதல் ஆசிரியர் பயிற்சியில் மாணவர் சேர்க்கை

தமிழகத்தில் ஜூலை 4ம் முதல் ஆசிரியர் பயிற்சியில் மாணவர் சேர்க்கை

By: vaithegi Sat, 25 June 2022 12:40:51 PM

தமிழகத்தில் ஜூலை 4ம் முதல் ஆசிரியர் பயிற்சியில் மாணவர் சேர்க்கை


தமிழகம்: தமிழகத்தில் மாவட்ட ஒன்றிய ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மற்றும் அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் 2022-23ம் கல்வி ஆண்டுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 4ம் தேதி முதல் http://scert.tnschools.gov.in என்ற இணையம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். அதற்கான உரிய கட்டணத்தை செலுத்த வேண்டும்.

இக்கட்டணத்தை செலுத்த டெபிட் கார்டு, கிரடிட் கார்டு, நெட் பேங்கிங் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.

விண்ணப்பக் கட்டணமாக பொதுப்பிரிவு, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ரூ.500 செலுத்த வேண்டும் மற்றும் மாற்றுத்திறனாளிகள், எஸ்சி, எஸ்டி வகுப்பினர் ரூ.250 செலுத்த வேண்டும் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

student admission,teacher,applications ,மாணவர் சேர்க்கை,ஆசிரியர் ,விண்ணப்பங்கள்

மேலும், ஆசிரியர் பயிற்சி வகுப்புக்கு விண்ணப்பிக்க பொதுப்பிரிவை சேர்ந்தவர்கள் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். அதுமட்டுமின்றி எஸ்சி, எஸ்டி, எஸ்டி (எ) பிசி, பிசி(எம்) எம் பி சி, பிரிவினர் குறைந்த பட்சம் 45 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்த ஆசிரியர் பயிற்சி வகுப்பில் சேர விரும்புபவர்கள் குறைந்தபட்ச வயது வரம்பு 30 க்கு மிகாமல் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அதிகபட்ச வயது வரம்பு 35, ஆதரவற்றோர் மற்றும் கணவனால் கைவிட்டவர்கள் மட்டுமின்றி விதவைகளுக்கான வயது வரம்பு 40 ஆக விதிக்கப்பட்டுள்ளது.

இந்த பயிற்சிக்கான விண்ணப்பங்கள் ஜூலை 9ம் தேதி வரை இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்து கொள்ள வேண்டும் என கல்வி இயக்ககம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :