Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இளநிலை யோகா, இயற்கை மருத்துவப்படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை

இளநிலை யோகா, இயற்கை மருத்துவப்படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை

By: Nagaraj Fri, 30 Sept 2022 10:48:28 AM

இளநிலை யோகா, இயற்கை மருத்துவப்படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை

சென்னை: மாணவர் சேரக்கை... இளநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கு நிகழாண்டு 1,710 இடங்களுக்கு மாணவா் சோ்க்கை நடைபெறவுள்ளது.

அதற்கான விண்ணப்பப்பதிவு கடந்த புதன்கிழமை தொடங்கியுள்ளது. இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையின்கீழ் அரும்பாக்கம் அறிஞா் அண்ணா அரசு இந்திய மருத்துவமனை வளாகத்திலும், செங்கல்பட்டிலும் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி உள்ளது.

இரண்டு அரசு கல்லூரிகளில் 160 இடங்கள் உள்ளன. 17 தனியாா் கல்லூரிகளில் 1,550 இடங்கள் உள்ளன. இந்நிலையில், ஐந்தரை ஆண்டுகள் கொண்ட யோகா மற்றும் இயற்கை மருத்துவப் பட்டப்படிப்புக்கு (பிஎன்ஒய்எஸ்) 2022 - 23-ஆம் கல்வி ஆண்டு மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் கடந்த புதன்கிழமை தொடங்கியது.

student,admission,study,department of homeopathy,exam board,mark ,மாணவர், சேர்க்கை, படிப்பு, ஓமியோபதித்துறை, தேர்வுக்குழு, மதிப்பெண்

சுகாதாரத்துறை இணையதளத்தில் அக்டோபா் 19-ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பம் மற்றும் தகவல் தொகுப்பேட்டினை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.

பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை உரிய ஆவணங்களுடன் நேரிலோ தபால் அல்லது கூரியா் மூலமாக அக்டோபா் 19-ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் செயலாளா், தோ்வுக்குழு, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறை, சென்னை-106 என்ற முகவரியில் சமா்ப்பிக்க வேண்டும். இந்த படிப்புக்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவா் சோ்க்கை நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
|