Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • டாஸ்மாக்கில் 2 மாதத்தில் அனைத்தும் கணினி மயமாக்கப்படும் பணிகள் நிறைவு பெறும்

டாஸ்மாக்கில் 2 மாதத்தில் அனைத்தும் கணினி மயமாக்கப்படும் பணிகள் நிறைவு பெறும்

By: vaithegi Mon, 21 Aug 2023 3:17:58 PM

டாஸ்மாக்கில் 2 மாதத்தில் அனைத்தும் கணினி மயமாக்கப்படும் பணிகள் நிறைவு பெறும்

சென்னை: புதிய டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவில்லை என்று அமைச்சர் முத்துசாமி தகவல் .. தமிழ்நாட்டில் 5329 மதுபான சில்லறை விற்பனை கடைகள் செயல்பட்டு வந்த நிலையில் சமீபத்தில் 500 கடைகள் மூடப்பட்டன. பூரண மதுவிலக்கை பல்வேறு கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு உள்ளன.

இதையடுத்து டாஸ்மாக் கடைகளின் மூலம் தமிழக அரசுக்கு வருவாய் உயர்ந்து வரும் நிலையில் நிர்ணயித்த விலையை விட கூடுதலாக பணம் வசூலித்தால் ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என்று அமைச்சர் முத்துசாமி எச்சரித்து உள்ளார்.

tasmac,minister muthuswamy ,டாஸ்மாக்,அமைச்சர் முத்துசாமி

இந்த நிலையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட 10 இடங்களில் ரூ.16.67 கோடி மதிப்பிலான பணிகளை இன்று துவங்கி வைக்கவுள்ளோம்; டாஸ்மாக்கில் 2 மாதத்தில் அனைத்தும் கணினி மயமாக்கப்படும் பணிகள் நிறைவு பெறும்;

மேலும் 500 மதுபான கடைகள் மூடப்பட்டுள்ளதே தவிர புதிதாக எங்கும் கடைகள் திறக்கப்படவில்லை; பள்ளி, கோயில் மற்றும் மக்களின் புகாரின் அடிப்படையில் கடைகள் மாற்றம் செய்யப்பட்டு உள்ளதே தவிர புதிய கடைகள் திறக்கவில்லை" என அவர் கூறினார்.

Tags :
|