Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கல்லூரி விழாவில் பங்கேற்ற கவர்னர் தமிழிசைக்கு உற்சாக வரவேற்பு

கல்லூரி விழாவில் பங்கேற்ற கவர்னர் தமிழிசைக்கு உற்சாக வரவேற்பு

By: Nagaraj Sat, 20 May 2023 7:36:06 PM

கல்லூரி விழாவில் பங்கேற்ற கவர்னர் தமிழிசைக்கு உற்சாக வரவேற்பு

புதுச்சேரி: உற்சாக வரவேற்பு... புதுச்சேரி அருகே கல்லூரி ஆண்டு விழாவில் பங்கேற்ற ஆளுநர் தமிழிசைக்கு ஏராளமான மாணவ, மாணவிகள் பாரம்பரிய உடை மற்றும் கண்ணாடி அணிந்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

புதுச்சேரி பாக்குமுடையான்பேட்டையில் உள்ள உதியா கல்லூரியின் ஆண்டு விழா நேற்று மாலை நடைபெற்றது.

விழாவில் சிறப்பு விருந்தினர்களாக துணைநிலை ஆளுநர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். அவர்களை மேடைக்கு அழைத்து வந்த மாணவிகள் பட்டு புடவை, அலங்கார நகை அணிந்து கறுப்பு கூலிங் கிளாஸ் அணிந்து சினிமா பாடல்களுக்கு நடனமாடி உற்சாகமாக அழைத்து வந்தனர்.

college,festival,song,students,vijay, ,கல்லூரி, தமிழிசை, பாடல், மாணவிகள், விஜய், விழா

விஜய் படத்தின் “வாத்தி கம்மிங்” , “கோடம்பாக்கம் ஏரியா” மற்றும் ரஜினிகாந்த்தின் “மாஸ் மரணம்”, மலையாள மொழியின் “ஜிமிக்கி கம்மல்” ஆகிய பாடல்களுக்கு மாணவிகள் ஆடி வரவேற்றனர்.

தொடர்ந்து கல்லூரி மாணவி ரெகனா என்பவர் ஆளுநர், தமிழிசை ஓவியத்தை தலைகீழாக வரைந்து அசத்தினார். இதனை ஓவியத்தை பெற்று கொண்ட ஆளுநரும் முதல்வரும் மாணவியை மகிழ்ந்து பாராட்டினார்கள்.

விழாவில் பேசிய ஆளுநர் தமிழிசை, பெண்கள் தடைகளைத் தாண்டி முன்னேற வேண்டும் என்றார்.

Tags :
|
|