Advertisement

எரிசக்தி கட்டணங்களை குறைக்கும் திட்டம் அறிவிப்பு

By: Nagaraj Sat, 13 Aug 2022 10:47:23 PM

எரிசக்தி கட்டணங்களை குறைக்கும் திட்டம் அறிவிப்பு

பிரிட்டன்: எரிசக்தி கட்டணங்கள் குறைத்தல்... இந்திய வம்சாவளி பிரித்தானிய பிரதமர் வேட்பாளர் வீடுகளுக்கான அதிகரித்து வரும் செலவினங்களை சமாளிக்கும் பொருட்டு எரிசக்தி கட்டணங்களை குறைக்கும் திட்டத்தை அறிவித்துள்ளார்.


ஒவ்வொரு குடும்பமும் அந்தந்த எரிசக்தி பில்களில் சுமார் 200 பவுண்டுகள் சேமிப்பதை குறைக்கப்பட்ட மதிப்பு கூட்டப்பட்ட வரியுடன் பார்ப்பார்கள் என சுனக் உறுதியளித்துள்ளார். பிரித்தானியா இந்த வருடத்தில் மூன்று மடங்கிற்க்கும் மேலாக அதிக எரிசக்தி கட்டணங்களுக்கு தயாராகி வருவதனால் இலட்சக்கணக்கான பிரித்தானியர்கள் வறுமை கோட்டிற்கு கீழே தள்ளப்படலாம் என இலாப நோக்கற்ற நிறுவனங்கள் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகின்றது.


அதிகரித்து வரும் பண வீக்கத்திலிருந்து வரவிருக்கும் அடியை தணிக்க அரசாங்கம் பல பில்லியன் பவுண்டுகள் உதவி பொதியை தொடங்கினால் மட்டுமே அது நிகழாமல் தடுப்பதற்கான ஒரே வழியாக பார்க்கப்படுகின்றது. இந்த நிலையில் தற்போது பிரித்தானிய பிரதமர் பதவி மற்றும் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பதவிக்கான போட்டியில் சுனக் பின்தங்கிய நிலையில் இருக்கின்றார். முன்னிலையில் வெளியுறவு செயலாளர் லிஸ் ட்ரஸைபின் தொடர்கின்றார்.

postal votes,britain,this month,tax cuts,price ,தபால் வாக்குகள், பிரிட்டன், இந்த மாதம், வரிக்குறைப்பு, விலை

முன்னாள் நிதியமைச்சர் ஆன சுனக் தனது திட்டம் மிகவும் பாதிக்கப்பட கூடியவர்களுக்கு ஆதரவு ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான ஆதரவு மற்றும் அனைவருக்கும் சில ஆதரவு போன்றவற்றை உள்ளடக்கும் என கூறியுள்ளார். மேலும் அவர் நிதியமைச்சர் ஆக இருந்தபோது சுனக் எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியாளர்களின் லாபத்தின் மீது 25% கடுமையான வரியை அறிமுகப்படுத்தியுள்ளார்.


எரிசக்தி விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதனால் நான் அறிமுகப்படுத்திய எரிசக்தி இலாப வரியில் இருந்து அரசாங்கம் அதிக வருவாய் உயர்த்தக்கூடும் என அவர் தெரிவித்துள்ளார்.


அதே நேரம் சுனக்கின் போட்டியாளரான டிரஸ் எரிசக்தி ஆதரவு மூலமாக பணத்தை திரும்ப பெறுவதை விட குடும்பங்களுக்கான வரிக்குறைப்புகளை விரும்புவதாக அறிவித்திருக்கிறார். மேலும் அடுத்த பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டால் எரிசக்தி நிறுவனங்களுடன் இணைந்து விலைகளை குறைப்பதாக டிரஸ் உறுதி அளித்து இருக்கின்றார்.

இருந்தபோதிலும் சுனக் ஆதரவாளர்கள் வரிக்குறைப்பு ஏழைகளுடன் ஒப்பிடும்போது பணக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும் என தெரிவித்துள்ளனர். கன்சர்வேட்டிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த மாதம் முழுவதும் பிரித்தானியாவின் அடுத்த பிரதமரை தேர்ந்தெடுக்க ஆன்லைன் மற்றும் தபால் வாக்குகள் மூலமாக தங்கள் வாக்குகளை செலுத்துவார்கள்.

Tags :