Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 6 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளி கால அட்டவணையில் கலை மற்றும் பண்பாட்டு செயல்பாடுகள் இணைப்பு

6 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளி கால அட்டவணையில் கலை மற்றும் பண்பாட்டு செயல்பாடுகள் இணைப்பு

By: vaithegi Thu, 22 Sept 2022 2:44:18 PM

6 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளி கால அட்டவணையில் கலை மற்றும் பண்பாட்டு செயல்பாடுகள் இணைப்பு

சென்னை: கல்வி மேம்பாட்டு திட்டமாக அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடையே கல்வி இணைச் செயல்பாடுகளை ஊக்குவிக்க 6 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளி கால அட்டவணையில் கலை மற்றும் பண்பாட்டு செயல்பாடுகள் இணைக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து இந்த திட்டம் மூலம் வாரம் ஒரு நாள், கலை பண்பாட்டு கொண்டாட்டம் என்ற பெயரில் வகுப்பு நடத்தி அதன் மூலம் பாரம்பரிய கலை பண்பாட்டு பயிற்சி அளிக்க அரசு திட்டமிட்டுள்ளது.

school timetable,students , பள்ளி கால அட்டவணை,மாணவர்கள்

மேலும் இந்த வகுப்புகள் மூலம் மாணவர்களின் மன அழுத்தம் குறையும் என்றும் அவர்களின் கல்வி அறிவு மேம்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஒவ்வொருவரின் தனி திறமையையும் வெளிக்கொணரப்படும் என்றும் கூறுகின்றனர்.

இதையடுத்து இந்த கலை பண்பாட்டு செயல்பாடு வகுப்புகளில் சிறப்பாக செயல்படும் மாணவர்களுக்கு வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க வாய்ப்பு அளிக்கப்படும். மேலும் அத்துடன் வெற்றி பெறும் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு வெளிநாட்டு சுற்றுலாவுக்கு அழைத்து செல்லப்படுவார்கள் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Tags :