Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இடைத்தேர்தல் நடக்க இருப்பதால் ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள புதிய வாக்காளர்களுக்கு முன்னுரிமை தரவேண்டும்

இடைத்தேர்தல் நடக்க இருப்பதால் ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள புதிய வாக்காளர்களுக்கு முன்னுரிமை தரவேண்டும்

By: vaithegi Sat, 28 Jan 2023 12:51:05 PM

இடைத்தேர்தல் நடக்க இருப்பதால் ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள புதிய வாக்காளர்களுக்கு முன்னுரிமை தரவேண்டும்

சென்னை: புதிய வாக்காளர்களுக்கு முன்னுரிமை தரவேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவிப்பு ... தலைமைச் செயலகத்தில் பத்திரிகையாளர்களிடம் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு பேட்டி ஒன்றை அளித்து இருக்கிறார். அதில் வாக்காளர் அட்டையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு கடந்த 5 -ம் தேதி புதிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இதுவரை 10.17 லட்சம் புதிய வாக்காளர்கள் பட்டியலில் சேர்ந்து இருக்கின்றனர்.

இதையடுத்து வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய 2.15 லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். மேலும் மொத்தமாக 12.32 லட்சம் பேருக்கு புதிதாக வாக்காளர் அடையாள அட்டைகளை வழங்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகள் முடிக்க 2 மாதங்கள் ஆகும் என்று தெரிவித்துள்ளார். '

new voter,election commission of india , புதிய வாக்காளர் , இந்திய தேர்தல் ஆணையம்

இந்நிலையில் தமிழகத்தில் புதிதாக பலர் விண்ணப்பித்துள்ள நிலையில் அதில் இடைத்தேர்தல் நடக்க இருப்பதால் ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள புதிய வாக்காளர்களுக்கு முன்னுரிமை தரவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் அது மட்டுமில்லாமல் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் நம்பரை இணைக்க விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. இதுவரை மட்டும் 63.17 சதவீத வாக்காளர்களிடம் இருந்து ஆதார் விவரங்கள் பெறப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை, மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் 3.91 கோடி என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :