Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பெங்களூரு 4 முக்கிய மெட்ரோ ரயில் நிலையங்களில் முன்பதிவு ஆட்டோ சேவை

பெங்களூரு 4 முக்கிய மெட்ரோ ரயில் நிலையங்களில் முன்பதிவு ஆட்டோ சேவை

By: Nagaraj Tue, 04 Oct 2022 4:14:29 PM

பெங்களூரு 4 முக்கிய மெட்ரோ ரயில் நிலையங்களில் முன்பதிவு ஆட்டோ சேவை

பெங்களூர் : பெங்களூருவில் உள்ள 4 முக்கிய மெட்ரோ ரயில் நிலையங்களில் முன்பதிவு ஆட்டோ சேவை தொடங்கப்பட உள்ளது.

பெங்களூரு மக்களுக்கு உதவும் வகையில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து தாங்கள் செல்லும் இடங்களுக்கு ஆட்டோக்களை பயன்படுத்துவதால் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

இதை கருத்தில் கொண்டு பெங்களூருவில் உள்ள 4 முக்கிய மெட்ரோ ரயில் நிலையங்களில் முன்பதிவு ஆட்டோ சேவை தொடங்கப்பட உள்ளது. இத்திட்டம், டிசம்பர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதுகுறித்து, மெட்ரோ நிர்வாகம் கூறியதாவது:

bengaluru,december,metro trains,people,project ,ஆட்டோக்கள், சேவை, பெங்களூரு, மக்கள், மெட்ரோ ரயில்

பெங்களூரு மெட்ரோவில் உள்ள 4 மெட்ரோ ரயில் நிலையங்களில் பயணிக்கும் பயணிகள், மற்ற இடங்களுக்கு செல்ல ஆட்டோக்களுக்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும். மேலும், இரவு நேரத்தில் ஆட்டோக்களில் பயணம் செய்ய பெண்கள் தயக்கம் காட்டுகின்றனர். இதை கருத்தில் கொண்டு பெங்களூரு மெட்ரோ ஆணையம் மற்றும் பெங்களூரு போக்குவரத்து போலீசார் 4 மெட்ரோ நிலையங்களில் ஆட்டோ சேவையை பதிவு செய்ய திட்டமிட்டுள்ளனர்.

டிசம்பர் 1ஆம் தேதி முதல் இந்த சேவை தொடங்கும்.முதற்கட்டமாக நாகசந்திரா, பையப்பன ஹள்ளி, பனசங்கரி மற்றும் மெஜஸ்டிக் ரயில் நிலையங்களில் இந்த சேவை செயல்படுத்தப்படும். காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை 1 மணி நேரத்திற்கு ஒருமுறை போக்குவரத்து போலீசார் கவுன்டர்களை பார்வையிடுவார்கள்.

இந்த திட்டத்தின் மக்களின் அரவேற்ப்பை பொருத்தே அடுத்த கட்டமாக பெங்களூருவில் உள்ள மற்ற மெட்ரோ ரயில் நிலையங்களிலும் இந்த சேவையை கொண்டு வர உள்ளோம். இவ்வாறு மெட்ரோ நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

Tags :
|