11 நாட்களில் ரூ.35 கோடிக்கும் மேல் வசூல் வேட்டையாடியுள்ள பிச்சைக்காரன்-2
By: Nagaraj Wed, 31 May 2023 3:12:34 PM
சென்னை: வெளியான 11 நாளில் பிச்சைக்காரன் 2 படம் ரூ. 35 கோடிக்கும் மேல் வசூல் செய்து இன்னும் வெற்றிகரமாக திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
விஜய் ஆண்டனி இயக்கி, நடித்து கடந்த 19ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் பிச்சைக்காரன் 2. இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக காவ்யா என்பவரை நடித்திருந்தார். முதல் நாளில் இருந்து மக்கள் மத்தியில் இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
வசூல் ரீதியாகவும் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பி வருகிறது. இந்நிலையில், இப்படம் வெளிவந்து 11 நாட்கள் ஆகியுள்ள இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, பிச்சைக்காரன் 2 இதுவரை ரூ. 35 கோடிக்கும் மேல் வசூல் செய்து இன்னும் வெற்றிகரமாக திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது. இனி வரும் நாட்களிலும் நல்ல வசூலை எட்டும் என தகவல் தெரிவிக்கின்றனர்.