Advertisement

கழிவறையை வெறும் கைகளால் சுத்தம் செய்த பாஜ., எம்.பி.

By: Nagaraj Sat, 24 Sept 2022 10:48:45 AM

கழிவறையை வெறும் கைகளால் சுத்தம் செய்த பாஜ., எம்.பி.

மத்தியபிரதேசம்: பாஜக எம்.பி., ஜனார்தன் மிஸ்ரா, பள்ளில் ஒன்றில் உள்ள கழிவறையை எவ்வித உபகரணங்களும் இல்லாமல், வெறும் கைகளால் சுத்தம் செய்தார். இந்த வீடியோ தற்போது பெரிய அளவில் வைரலாகி வருகிறது.

மத்திய பிரதேச மாநிலம், காட்காரி கிராமத்தில் உள்ள மகளிர் பள்ளி ஒன்றில் மரம் நடும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பாஜக எம்.பி., ஜனார்தன் மிஸ்ரா நேற்று சென்றிருந்தார். மரம் நடும் நிகழ்ச்சிக்குப் பிறகு, பள்ளியில் உள்ள கழிவறை அசுத்தமாக இருப்பதை அவர் கண்டார்.

cleaned,video,website,bare hands,clean india ,சுத்தம் செய்தார், வீடியோ, இணையதளம், வெறும் கைகள், தூய்மை இந்தியா

உடனடியாக ஒரு வாளியில் தண்ணீரை எடுத்துக்கொண்டு, ஜனார்தன் மிஸ்ரா தனது கைகளால் கழிவறையை சுத்தம் செய்தார். அந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்திலும் அவர் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.


தூய்மை இந்தியா திட்டத்தின் தீவிர ஆதரவாளரான ஜனார்தன் மிஸ்ரா கடந்த 2018ஆம் ஆண்டு தொடக்கப் பள்ளி கழிவறையையும் இதேபோன்று சுத்தம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
|