Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இஸ்தான்புல்லில் குண்டுவெடிப்பு

மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இஸ்தான்புல்லில் குண்டுவெடிப்பு

By: Nagaraj Mon, 14 Nov 2022 8:49:43 PM

மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இஸ்தான்புல்லில் குண்டுவெடிப்பு

துருக்கி: பயங்கர குண்டு வெடிப்பு... துருக்கி நாட்டின் பெரு நகரங்களில் ஒன்றாக இருப்பது இஸ்தான்புல். இங்கு, மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள தெருவில் பயங்கர குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது.

இதில், 4 பேர் மரணம் அடைந்திருப்பதாகவும் 38 பேர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் இஸ்தான்புல் ஆளுநர் தெரிவித்துள்ளார். ட்விட்டரில் வெளியிடப்பட்ட வீடியோ ஒன்றில் தீப்பிழம்புகள் வெளியேறுவதை காணலாம். பலத்த சத்தம் கேட்கப்பட்டது. இதையடுத்து மக்கள் திரும்பி ஓடுவதும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

istanbul,twitter,bomb blast,people,injury ,இஸ்தான்புல், ட்விட்டர், குண்டு வெடிப்பு, மக்கள், காயம்

இந்த பயங்கர வெடிப்பு, எப்படி ஏற்பட்டது என்பது குறித்து தெரியவில்லை. புகழ்பெற்ற இஸ்திக்லால் ஷாப்பிங் தெருவில் இந்த குண்டு வெடிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

அந்த தெருவில் கடைகள் மற்றும் உணவகங்கள் வரிசையாக காட்சியளிக்கின்றன. இது, சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களிடையே பிரபலமாக இருப்பதால், பொதுவாக அங்கு கூட்டம் அதிகமாக இருக்கும்.

இதுகுறித்து இஸ்தான்புல் ஆளுநர் அலி யெர்லிகாயா தனது ட்விட்டர் பக்கத்தில், "உயிர்சேதம். மக்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது" என பதிவிட்டுள்ளார்.

Tags :
|