Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா விதிமுறைகளை பின்பற்றாமல் பீகாரில் நடக்கும் தேர்தல் பிரசார கூட்டங்கள்

கொரோனா விதிமுறைகளை பின்பற்றாமல் பீகாரில் நடக்கும் தேர்தல் பிரசார கூட்டங்கள்

By: Karunakaran Tue, 27 Oct 2020 1:29:43 PM

கொரோனா விதிமுறைகளை பின்பற்றாமல் பீகாரில் நடக்கும் தேர்தல் பிரசார கூட்டங்கள்

இந்தியாவில் கொரோனா பரவல் குறைய தொடங்கினாலும் இன்னும் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை. இந்த நெருக்கடியான சூழலில் பீகார் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. அங்கு நாளை முதல் 3 கட்டங்களாக நடைபெறும் தேர்தலுக்காக, மாநிலம் முழுவதும் உச்சக்கட்ட பிரசாரம் நடந்து வருகிறது. பீகார் தேர்தல் அறிவித்தபோதே, அங்கு பிரசார நிகழ்ச்சிகளில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடுமையாக பின்பற்ற வேண்டும் என தேர்தல் கமிஷன் உத்தரவிட்டு இருந்தது

இந்த விதிமுறைகள் பிரதமர் மோடி பங்கேற்ற தேர்தல் பிரசார கூட்டங்களில் பின்பற்றப்பட்டு இருந்தன. தேரி, கயா, பகல்பூர் போன்ற இடங்களில் அவர் பங்கேற்ற கூட்டங்களில் அதிகாரிகள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் இந்த விதிமுறைகளை கவனமுடன் மக்கள் கடைப்பிடிக்க வைத்தனர். மேலும், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்ற பிரசார கூட்டங்களிலும் இந்த விதிமுறைகள் பின்பற்றப்பட்டு இருந்தன.

campaign,bihar,corona rules,corona spread ,பிரச்சாரம், பீகார், கொரோனா விதிகள், கொரோனா பரவல்

ஆனால், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற பேதமும் இன்றி அனைத்து கட்சிகளின் கூட்டங்களிலும் மக்கள் முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் கும்பல், கும்பலாக கூடியிருப்பதை காண முடிகிறது. முக கவசம் அணியாதது ஏன்? என கேட்கும்போது, பலரும் அதற்கு அலட்சியமான பதில்களையே தருகின்றனர். கொரோனா விதிமுறைகளை பின்பற்றாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாநில தேர்தல் அதிகாரிக்கு தலைமை தேர்தல் கமிஷன் உத்தரவிட்டு உள்ளது.

கொரோனா விதிமுறைகளை பின்பற்றாதவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படுகிறது. அந்த வகையில் கூட்டத்தை ஒருங்கிணைத்தவர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் மீது பேரிடர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. எனினும் கொரோனா அலட்சியம் தொடர்கிறது. பீகார் தேர்தல் களத்தில் கொரோனா தடுப்பு விதிமுறைகளுக்கு எதிரான இந்த அலட்சியப்போக்கு மாநிலத்தில் நோய் தொற்றை அதிகரிக்கும் ஆபத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags :
|