விமானங்களில் கொரோனா பரவுமா? அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மையம் விளக்கம்
By: Nagaraj Thu, 28 May 2020 11:47:53 AM
விமானங்களில் கொரோனா பரவ வாய்ப்பு இல்லை. வடிகட்டிய நிலையில் காற்ற சுழல்வதால் என்று அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அம் மையம் மேலும் தெரிவித்துள்ளதாவது:
விமானங்களில், வைரஸ் அல்லது இதர நோய்க் கிருமிகள் பரவ வாய்ப்பில்லை. காரணம் விமானத்திற்குள், வடிகட்டிய நிலையில் தான் காற்று சுழல்கிறது.
அதேசமயம் விமானத்தில், சமூக இடைவெளியை கடைபிடிப்பது சிரமம் என்பதால் கொரோனா தாக்குதலுக்கான வாய்ப்பும் உள்ளதை மறுப்பதற்கில்லை. இவ்வாறு தெரிவித்துள்ளது.
விமான பயணங்களில், இரு இருக்கைகளுக்கு நடுவே, ஒரு இருக்கையை காலியாக விட வேண்டும் என, இம்மையம் வெளியிட்டுள்ள பயண விதிமுறைகளில் வலியுறுத்தப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Tags :
flights |
corona |
spread |