Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கனடா பெடரல் அரசாங்கத்தின் முடிவு... வாடகை குடியிருப்பாளர்கள் மகிழ்ச்சி

கனடா பெடரல் அரசாங்கத்தின் முடிவு... வாடகை குடியிருப்பாளர்கள் மகிழ்ச்சி

By: Nagaraj Sat, 03 Dec 2022 11:56:01 AM

கனடா பெடரல் அரசாங்கத்தின் முடிவு... வாடகை குடியிருப்பாளர்கள் மகிழ்ச்சி

கனடா: ஊக்கத் தொகை அளிக்க முடிவு... கனடாவில் வாடகை குடியிருப்பாளர்களுக்கு 500 கனேடிய டொலர் ஊக்கத்தொகை அளிக்க பெடரல் அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த திட்டத்தில் பயன்பெற, டிசம்பர் 12ம் திகதி முதல் விண்ணப்பிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளனர். இந்த திட்டமானது குறைந்த வருவாய் கொண்ட வாடகைதாரர்களுக்கானது எனவும், ஆண்டு நிகர வருவாய் 35,000 டொலருக்கும் குறைவாக இருத்தல் வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

அல்லது, ஆண்டு வருவாயாக 20,000 டொலர் ஈட்டும் தனியொருவர், குறித்த தொகையில் 30 சதவீதம் அளவுக்கு வாடகை கட்டணமாக செலுத்துபவராக இருந்தாலும் இந்த 500 டொலர் ஊக்கத்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.

incentives,tenants,officers,party,credit ,ஊக்கத் தொகை, வாடகைதாரர்கள், அதிகாரிகள், தரப்பு, வரவு

மேலும், இந்த திட்டத்தின் பயனைப் பெற, அவர்களின் 2021 வருமான வரி தாக்கல் செய்திருக்க வேண்டும். 2022 டிசம்பர் 1ம் திகதிக்குள் குறைந்தபட்சம் அவர்கள் 15 வயதினராக இருக்க வேண்டும், 2022ல் அவர்கள் தங்களுக்கான வாடகையை செலுத்தியிருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட நெறிமுறைகளை வகுத்துள்ளனர்.

அத்துடன், விண்ணப்பதாரர்களின் தெளிவான முகவரி, யாருக்கு வாடகை செலுத்த வேண்டும், அவர்களை தொடர்புகொள்ளும் முறைகள், எத்தனை மாதங்கள் தொடர்புடைய குடியிருப்பில் தங்கியிருந்தீர்கள் உள்ளிட்ட தகவல்களும் அளிக்கப்பட வேண்டும்.

குறித்த விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு, 5 நாட்களில் ஊக்கத்தொகை வரவு வைக்கப்படும் என்றே அதிகாரிகள் தரப்பில் தெரிவ்க்கின்றனர்.

Tags :
|