பல்பீர் சிங் உள்ளிட்டோர் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
By: Nagaraj Sat, 22 Apr 2023 8:16:12 PM
அம்பாசமுத்திரம்: 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு... திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் விசாரணைக்கு வந்தவர்களின் பற்களை பிடுங்கிய விவகாரம் தொடர்பாக ஏஎஸ்பி பல்வீர் சிங் உள்ளிட்டோர் மீது 4 பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஐஏஎஸ் அதிகாரி அமுதா சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில் இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது.
இந்நிலையில், சிபிசிஐடி விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்ட உலகராணி வழக்கு தொடர்பான ஆவணங்களை பெற்று விசாரணையை தொடங்கியுள்ளார்.
கொடுங்காயம் ஏற்படுத்துதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Tags :