- வீடு›
- செய்திகள்›
- அனைத்து ரயில் நிலையங்களிலும் சிசிடிவி கேமிரா! ஜனவரி 2023 திட்டத்தை நிறைவேற்ற முடியும் என தகவல்..
அனைத்து ரயில் நிலையங்களிலும் சிசிடிவி கேமிரா! ஜனவரி 2023 திட்டத்தை நிறைவேற்ற முடியும் என தகவல்..
By: Monisha Fri, 15 July 2022 7:26:58 PM
டெல்லி: நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் இந்தியன் ரயில்வேயின் முதல் கட்ட வீடியோ சர்வைலென்ஸ் சிஸ்டம் ப்ராஜக்ட் (video surveillance system project) வரும் 2023 ஜனவரிக்குள் நிறைவடையும் என்று அறிக்கை ஒன்றில் RailTel தெரிவித்துள்ளது.முதல் கட்ட திட்டத்தில் விடுபட்டுள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் இரண்டாம் கட்டத்தில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணி செயல்படுத்தப்படும் என்றும் அறிக்கையில் RailTel குறிப்பிட்டுள்ளது.
இந்திய போக்குவரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ரயில் நிலையங்களில் பாதுகாப்பை மேம்படுத்தும் முயற்சியாக ரயில் நிலையங்களில் உள்ள வெயிட்டிங் ஹால்ஸ், ரிசர்வேஷன் கவுன்டர்ஸ், பார்க்கிங் ஏரியா, மெயின் கேட் என்ட்ரன்ஸ் மற்றும் எக்சிட்ஸ், ஃபுட் ஓவர் பிரிட்ஜஸ் உள்ளிட்ட முக்கிய இடங்களில் IP அடிப்படையிலான வீடியோ கண்காணிப்பு அமைப்பை (Video Surveillance System) நிறுவும் பணியில் ரயில்வே ஈடுபட்டுள்ளது.
இந்த திட்டத்தை நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் கண்காணிப்பு சிசிடிவி கேமராக்களை நிறுவும் இந்தியன் ரயில்வேயின் திட்டத்தை RailTel நிறுவனம் தான் செயல்படுத்தி வருகிறது. நிர்பயா நிதியின் கீழ் ரயில்வே அமைச்சகம் மூலம் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ள இந்த திட்டத்தின் முதல் கட்டமானது, A1, A, B மற்றும் C கேட்டகிரி ரயில் நிலையங்களை உள்ளடக்கியது.
முதல் கட்டத்தில் மொத்தம் 756 ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமராக்களை நிறுவும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், மேலும் இந்த பணிகள் ஜனவரி 2023-க்குள் முடிவடையும் என்றும் RailTel கூறி இருக்கிறது.
சமீபத்தில் பேசிய ரயில்வே அமைச்சர் அஸ்வனி வைஷ்ணவ் ரோலிங் ஸ்டாக், கட்டுமானம், பாதுகாப்பு, சைபர் செக்யூரிட்டி அல்லது ஹியூமன் இன்டர்ஃபேஸ் உள்ளிட்டவை இருக்கும் சூழலில், புதிய தொழில்நுட்பத்தை ரயில்வேயில் நாம் வேகமாக உள்வாங்க வேண்டும் என்றார்.ரயில் நிலையங்களின் சிசிடிவி கேமராக்கள் மற்றும் வீடியோ ஃபீட்கள் ரயில் பாதுகாப்பை உறுதிப்படுத்த மூன்று நிலைகளில் கண்காணிக்கப்படும்.
சிசிடிவி கேமராக்களில் பதிவாகும் வீடியோ காட்சிகள் 30 நாட்கள் வரை சேமிக்கப்படும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.