பள்ளிகளில் நல குழு உருவாக்க.. மத்திய அரசு உத்தரவு
By: vaithegi Wed, 04 Oct 2023 5:07:44 PM
இந்தியா: பல்வேறு காரணங்களால் பள்ளி மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்வு அதிகரிப்பு -தடுக்க நல குழு .. இந்தியாவில் பள்ளி மாணவர்கள் தேர்வில் தோல்வியுறுதல், சக மாணவர்கள் இடையேயான பிரச்சனை குடும்ப ரீதியிலான பிரச்சனை, மன அழுத்தம் உள்ளிட்ட காரணங்களாக தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்வு அதிகரித்து கொண்டே வருகிறது.
இதையடுத்து அண்மை காலமாக நீட் தேர்வு உள்ளிட்ட தேர்வு முடிவுகள் வெளியாகும் போது பல மாணவர்கள் தற்கொலை செய்து செய்திகளை நாம் கேட்டிருப்போம். கடந்தாண்டில் மட்டும் இந்தியாவில் சுமார் 13,000 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கிறது.
மேலும் இது போன்ற தற்கொலை முடிவுகளிலிருந்து மாணவர்களை பாதுகாக்கும் பொருட்டு மத்திய அரசு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதாவது தற்கொலைகளை தடுப்பதற்காக உம்மீட் என்னும் வழிகாட்டு வரைவை மத்திய பள்ளி துறை அமைச்சகம் வெளியிட்டு உள்ளது.
எனவே அதன்படி ஒவ்வொரு பள்ளியிலும் பள்ளி முதல்வரின் தலைமையில் நல குழு உருவாக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.