Advertisement

இனி இ-சேவை மையங்களில் சான்றிதழ்கள் வாங்கலாம்..

By: Monisha Sat, 02 July 2022 8:31:49 PM

இனி இ-சேவை மையங்களில் சான்றிதழ்கள் வாங்கலாம்..

தமிழ்நாடு: தமிழகத்தில் மின்னாளுமை முகமை இயக்கம் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி வாயிலாக இ சேவை மையங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
தமிழகத்தில் ஆயிரத்திற்கு அதிகமான அரசு இ சேவை மையங்கள் செயல்பாட்டில் உள்ளது. அவற்றில் பிறப்பு சான்றிதழ், வருமான சான்றிதழ், ஆதார் பதிவு உள்ளிட்ட 80க்கும் மேற்ப்பட்ட சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றது.
பல இ சேவை மையங்களில் பொதுமக்கள் தங்களுக்கு வேண்டிய சான்றிதழ்கள் பதிவிறக்கம் செய்து கொள்கின்றன.

e-service,center,marriage,certificates ,மின்னாளுமை, முகமை,அரசு, இ சேவை,ee

இந்நிலையில் இனி இ சேவை மையங்களில் திருமண சான்றிதழும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கோவில்களில் திருமண பதிவு செய்யவும்,சமுக நலத்துறையின் உதவியை பெறவும் விஇஒ இனி திருமண சான்று வழங்ககூடாது என வருவாய்த்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

அத்துடன் கோவில் நிர்வாகமும் இனி விஏஓக்களிடம் சான்று பெற்று வருமாறு கேட்க வேண்டாம் என்று தெரிவிக்கப்படுள்ளது. இனி இ மையங்களில் வாயிலாக திருமண சான்றுகள் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.

Tags :
|