Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இன்று இந்த இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்பு

இன்று இந்த இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்பு

By: vaithegi Tue, 31 Jan 2023 09:37:18 AM

இன்று இந்த இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: நேற்று முன்தினம் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காலை 08:30 மணி அளவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், இலங்கை -திரிகோணமலையிலிருந்து கிழக்கு-தென்கிழக்கே சுமார் 670 கிலோ மீட்டர் தொலைவிலும், காரைக்காலில் இருந்து கிழக்கு- தென்கிழக்கே சுமார் 880 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

இதையடுத்து இது இன்று மாலை வரை மேற்கு- வடமேற்கு திசையிலும், அதன் பிறகு மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்துநாளை காலை இலங்கை கடற்பகுதிகளை கடக்கக் கூடும்.

rain,low pressure area,chennai ,மழை , காற்றழுத்த தாழ்வு பகுதி,சென்னை

எனவே இதன் காரணமாக, இன்று தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடிமின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என அறிவித்துள்ளது.

Tags :
|